(Reading time: 16 - 31 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஏன் செய்யனும் எனக்கும் இந்த கல்யாணம் கஷ்டம்னு அவருக்குத் தெரியாதா என்ன”

  

”தெரியும் ப்ச் என்ன செய்றது, வேங்கையன் உன்னை பொண்ணு கேட்டுதான் அப்பா அம்மாவோட இங்க வந்தாப்ல ஆனா அந்த பாஸ்கரன் இருந்தது அவனுக்கு சங்கடமா போச்சி, பாஸ்கரனையும் அவனையும் ஒப்பிட்டுப் பார்த்தான்,

  

தான் ஒரு விவசாயி பாஸ்கரன் ஒரு டாக்டர்

  

தன்னை கல்யாணம் செய்துக்கிட்டா மஹதி எங்க இருப்பா கிராமத்துல தானே அதைவிட பாஸ்கரனை கல்யாணம் செய்துக்கிட்டா லண்டன்க்கு போவா

  

நம்ம கூட இருந்தா அவளை இரண்டாந்தாரம்னுதானே எல்லாரும் சொல்வாங்க பாஸ்கரனை கட்டிக்கிட்டா உனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும்னு நினைச்சான்

  

அவனோட தாழ்வு மனப்பான்மைதான் இவ்ளோ தூரம் கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கு மஹதி, இதுல அவன் மேலயும் தப்பில்லை, உன் மேலயும் தப்பில்லை, எது எப்படியோ உண்மையை புரிஞ்சிக்கிட்டு டீசன்டா இங்கிருந்து கிளம்பிப் போனானே, பாஸ்கரன் எவ்வளவோ தேவலை ஆனா நீ தானா வந்த வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறியே”

  

”போங்கப்பா எதுக்காக அவரு மத்தவங்களோட தன்னை கம்பேர் பண்ணி பார்க்கனும்“

  

”என்ன செய்றது அவனோட முதல் கல்யாண வாழ்க்கை கசப்பா மாறினதால அதுக்கு அப்புறம் எது மேலயும் நம்பிக்கையில்லாம இருந்துட்டான், அவனோட மனநிலைமையையும் நாம புரிஞ்சிக்கனும்ல”

  

”நான் செஞ்சது தப்புன்னு சொல்றீங்களா“

  

”இல்லையே வேங்கையனோட அம்மாவே உன்னை பாராட்டியிருக்காங்களே”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.