பாஸ்கரனும் இருப்பாரு அதை தெரிஞ்சிக்க”
”எல்லாம் முடிஞ்சிடுச்சி தேவையில்லாம பேசி வைக்காத நீ சொல்ற மாதிரியெல்லாம் நான் வாழமாட்டேன் என்னை நான் மாத்திக்குவேன்“
”மாத்திக்குவியா இல்லை உன்னை நீயே ஏமாத்திக்குவியா“
”போதும் ஜானு நீ போ வெளிய போ”
”ஏன் அழப்போறியா, அச்சச்சோ உனக்கு போட்ட மேக்கப் கலைஞ்சிடுமே, மேக்கப் போட்ட பொண்ணுங்களும் கிளம்பிப் போயிட்டாங்களே, இனி எந்த மேக்கப் போட்டு உன்னோட நடிப்பை மூடி மறைப்ப மஹதி”
”ஜானு ப்ளீஸ் வெளிய போ” என அவள் கைகூப்பி கெஞ்ச அதில் ஜானகியோ கோபத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றாள்.
அவள் சென்றதும் அறைக்கதவை சாத்திவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள், மேக்கப் அனைத்தும் வீணானது, அழுது முடித்து முகத்தை கழுவி புது மேக்கப்பை அவளே செய்துக் கொண்டதும் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தாள் ஜானகி நின்றிருந்தாள் மஹதியையே உற்று உற்றுப் பார்த்தாள்
”என்னடி அப்படி பார்க்கற”
”மேக்கப் தூக்கலா இருக்கே நடிப்பு இன்னும் பலமா இருக்குமோ” என சொல்ல மஹதி கடுப்பாகி
”எதுக்கு வந்த”
”ம் ரிசப்ஷனுக்கு நேரமாச்சி உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க அதான் வந்தேன்” என சொல்ல மஹதியோ