Page 6 of 15
”உன்னை நீயே கேட்டுக்க”
”என்னடி சொல்ற”
”என்னை அப்பவே ரூம் விட்டு வெளிய அனுப்பிட்டு நீ என்ன செய்த அதை சொல்லு” என கேட்க அவளோ தடுமாறினாள்
”சொல்லுடி அழுதியா என்ன”
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”உன் அழுகையை ஜன்னல் வழியா பார்த்துட்டாரு அந்த டாக்டரு”
”என்னடி சொல்ற”
”ஆமாம் மஹதி உடனே அவர் உங்கப்பாகிட்ட என்னாச்சி ஏதாச்சின்னு கேட்டு வைக்க உங்கப்பாவும் மனசுல அடக்கி வைச்சிருந்த எல்லா உண்மையையும் கொட்டிட்டாரு“
“அய்யோ”
”அதேதான் வந்த கோபத்தில அந்த டாக்டரு வேங்கையனை பிடிச்சி கண்ணாபின்னான்னு திட்டிட்டாரு”
“திட்டினாரா எதுக்கு”
”எப்படி நீ ஒரு பொண்ணுக்கு துரோகம் இழைக்கலாம்னு கேட்டாப்பல”
”அதுக்கு அவர் என்ன சொன்னாராம்“