(Reading time: 16 - 31 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”நட்புக்கு துரோகம் இழைக்க முடியலைன்னு சொன்னாரு அதுக்கு டாக்டர் சொன்னாரு ஒரு பொண்ணுக்கு துரோகம் செய்ற அந்த நட்பே எனக்கு தேவையில்லைன்னு சொல்லி உடனே கல்யாணத்தை நிப்பாட்டிட்டாரு, அப்புறம் உங்கப்பா வீரசிங்கம் மாமாகிட்ட பேசினாரு, பாஸ்கரனுக்கு பதிலா வேங்கையனை நிப்பாட்டி ஆச்சி”

  

”சே”

  

”என்னடி சே எல்லாம் நல்லாதானே போயிருக்கு எதுக்கு இப்ப அலுத்துக்கற” என சொல்ல மஹதியோ வேங்கையனைப் பார்த்து

  

”இப்ப கூட நீங்க எனக்காக வரலை அதானே” என கேட்க அவனோ நொந்துப் போய்

  

”அப்படியில்லை நான் வந்து”

  

”போதும் நான் நடிக்கறேன்னு சொல்லிட்டு இப்ப நீங்க ஏன் இப்படி நடிக்கறீங்க யாராவது அவார்டு தராங்களா உங்களுக்கு”

  

”நான் நடிக்கலை”

  

”போதும் உங்களை பார்க்கவே வெறுப்பா இருக்கு, பாஸ்கரன் போன பின்னாடி நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சை போடத்தேவையில்லை நான் போறேன்” என சொல்ல வேங்கையனோ பதறினான்

  

”வேணாம் இப்படி செய்யாத  நில்லு”

  

”முடியாது” என சொல்லிவிட்டு கடகடவென மேடையை விட்டு இறங்கி வர மங்களம் தயாராக நின்றிருந்தார்

  

”இப்படித்தான் இருக்கனும், இதுதான் நீ, உன்னோட தன்மானத்தை நீ எங்கயும் விட்டுக்கொடுக்கலை சபாஷ்” என சொல்ல மஹதியோ

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.