”அத்தை”
”எங்க நீ ஜானகியை போல இருப்பியோன்னு நினைச்சி பயந்துட்டேன் பரவாயில்லை நீ என்னைப் போலதான் இருக்க” என சொல்ல ஜானகி வந்தாள்
”இப்ப எதுக்கு என்னை இழுக்கறீங்க” என கேட்க அதற்கு மங்களமோ
”பின்ன என் பையனை கட்டிக்கிட்டும் மூர்த்தி வேணும்னு சொன்ன, மூர்த்தியோட கெட்ட எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டு திரும்பவும் என் பையன்கிட்ட வந்த, என் பையன் உன்னை ஏத்துக்காம உன்னை உன் வீட்ல விட்டப்பின்னாடி மூர்த்தி வரவும் அவனை ஏத்துக்கிட்ட, உன்னைப் போல அடிக்கடி மனசு மாறாம என் சின்ன மருமகள் எப்படி நிலையா உறுதியா இருந்தா பார்த்தியா”
”ம்க்கும் எப்ப பாரு என்னையே குறை சொல்லுங்க, நான் என்ன செய்றது, என் பக்கம் வீக்கா இருந்தது மஹதிக்கு பரவாயில்லை, உசுரை கொடுக்க வேங்கையன் ரெடியா இருந்தும் அவள் ஏத்துக்கலையே அதை பாருங்க முதல்ல”
”ஏத்துக்கலைன்னா போகட்டும் தப்பில்லை” என சொல்லிய மங்களம் மஹதியிடம்
”அம்மாடி நீ இப்ப செஞ்ச காரியம் பாராட்டுக்குரிய விசயம், நீ சரியா இருக்க எப்ப நீ மனம் மாறி வேங்கையன் வேணும்னு நினைக்கறியோ அப்ப வா என் வீட்டு வாசல்கதவு திறந்தேயிருக்கும், நீ ராத்திரியில வந்தாலும் சரி, கதவை திறந்தே வைச்சிருக்கேன் ஆனா வரும் போது மஹதியா இல்லை என் வீட்டு சின்ன மருமகளாதான் வரனும்“
”நான் வரமாட்டேன் அத்தை” என சொல்ல மங்களம் சிரித்தபடியே தன் மகனைப் பார்த்து
”ஊருக்கு கிளம்பலாம் வா” என சொல்ல அவனோ மஹதியைப் பார்த்து ஏங்கினான் அவளோ கோபத்தில் முறைத்தாள். அதில் அவனோ தன் தாயிடம் வந்து