(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

மனதில் வருந்திக் கொண்டிருந்தாள். இவர்களை தவிர அர்ச்சனாவும் மனதில் ஒரு கேள்வியை வைத்து குழப்பிக் கொண்டிருந்தாள்!

   

இந்துவிற்கு சஞ்சீவின் மீது காதல் என்பதை அர்ச்சனா புரிந்துக் கொண்டிருந்தாள். காஞ்சனாவை எப்படியாவது சமாளித்து விடலாம் என்றும் அவள் நம்பினாள். ஆனால், திடீரென இந்து சஞ்சீவுக்கும் அவளுக்கும் நடுவே இருந்த உறவு முடிந்து விட்டதாக சொன்னப் போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு தடவை அர்ச்சனா கேட்டும், அவர்களுக்குள் ப்ரேக்-அப் ஆனதன் காரணத்தை இந்து அவளிடம் சொல்லவில்லை.

   

சஞ்சீவிடம் புதிதாக குறை எதையும் கண்டுப் பிடித்து இந்து இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று தான் அர்ச்சனாவிற்கு தோன்றியது. அப்படி ஏதாவது இருந்திருந்தால் இந்து அதை அவளிடம் மறைத்திருக்க மாட்டாள் என்பது அர்ச்சனாவிற்கு நன்றாகவே தெரியும். பிறகு இந்த திடீர் ப்ரேக்-அப்பிற்கான காரணம் என்ன என்று தான் அவளுக்குப் புரியவில்லை...!!!

  

தூங்காமல் விழித்திருந்தப் போதெல்லாம் அர்ச்சனாவிற்குள் இதே கேள்வி தான உழன்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை லக்ஷ்மி அவளை சந்திக்க வந்தப் போது, இந்துவையும் வீணாவையும் கேன்டினுக்கு அனுப்பி விட்டு, தன் மனதில் இருந்த கேள்வியை தோழியிடம் பகிர்ந்துக் கொண்டாள் அர்ச்சனா.

  

“என்ன அர்ச்சனா இது? ஏதோ நல்ல வேளை உனக்கு பெரிசா எதுவும் இல்லைன்னு நாங்க எல்லாம் சந்தோஷப் பட்டுட்டு இருக்கும் போது, நீ இப்படி மனசுல கேள்வியை வச்சுட்டு குழம்புறேன்னு சொல்ற? அதெல்லாம் மெதுவா இந்து கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்! இப்போ எதுக்கு யோசிச்சுட்டு இருக்க???”

  

“இல்லை லக்ஷ்மி... எனக்கு இந்துவை நினைச்சு ஒரே கவலையா இருக்கு... யோசிச்சு பாரு, ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனா அவளுக்கு யார் இருக்கா?”

  

“ரொம்ப மனசை போட்டு குழப்பாதே... இந்து எனக்கும் மகள் போல தான்... நான் அவக் கிட்ட கேட்கிறேன்... நீ நந்தினி கிட்ட கேட்டீயா? அவளுக்கு தானே எப்போவும் இந்துவை கஷ்டப் படுத்தி பார்ப்பதுல தனி சந்தோஷம்...!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.