(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

திடீர்னு அவங்க ரெண்டுப் பேரும் சரியா பேசிக்குறதில்லை...” என்றபடி சொல்ல வந்ததை கேட்க தயங்கினாள் அர்ச்சனா.

  

“ஓ!” என்பதற்கு மேல் நந்தினியும் எதுவும் சொல்லவில்லை.

  

சில வினாடி தயக்கத்திற்குப் பிறகு, மெல்ல பேசினாள் அர்ச்சனா...

  

“இல்ல, தப்பா எடுத்துக்காதே நந்தினி... நீ ஏதாவது இந்து கிட்ட சஞ்சீவ் கூட பழகுறதை பத்தியோ, அதெல்லாம் வேண்டாம் என்கிற மாதிரியோ ஏதாவது சொன்னீயா?”

  

அர்ச்சனா தயங்கி தயங்கி கேள்வியை முடிக்கவும், காஞ்சனா அந்த ஹாஸ்பிட்டல் அறை உள்ளே வரவும் சரியாக இருந்தது! காஞ்சனாவின் பின்னே பேசியப் படி கீதாவும் சஞ்சீவும் வந்தார்கள். அர்ச்சனா நந்தினியிடம் கேட்ட கேள்வி பின்னால் வந்த இருவருடைய காதில் விழுந்ததோ இல்லையோ, காஞ்சனாவின் காதில் விழுந்தது. ஆனால் அதை கண்டுக் கொள்ளாததுப் போல் அர்ச்சனாவிடம் சென்று நலம் விசாரித்தாள் காஞ்சனா. அவளின் பின் வந்த கீதாவும் தொடர்ந்துப் பேசவும், அர்ச்சனாவின் கேள்வி காற்றில் கரைந்துப் போனது!

  

🌼🌸❀✿🌷

   

கீதாவும் சஞ்சீவும் வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழையைப் பற்றி சொல்லவும், அர்ச்சனாவிற்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. சென்னையில் மழையா!!!! அவளின் சந்தேகத்தை போக்குவதுப் போல் நந்தினியும் சொன்னாள்.

  

“ஆமாம் அம்மா, நல்ல மழை... திடீர்னு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... நீங்க இங்கே ஏஸி ரூம்ல இருக்குறதால தெரியலை...”

  

“ஓ! அப்படி மழைக் கொட்டுற அளவுக்கு என்ன அதிசயம் நடந்தது?” என்றாள் அர்ச்சனா புன்னகையோடு.

  

“ஒருவேளை நந்தினியும் இந்துவும் ஒரே இடத்தில சண்டை போடாமல் இருக்குறதால இருக்கும்...” என்றாள் கீதா.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.