வந்தாள்.
”நீதிபதி அவர்களே” என கம்பீரமாக அழைத்தபடி சிலம்புவை அழைத்துக் கொண்டு வந்து நின்றாள்.
ஜட்ஜோ
”யார்மா நீ” என கேட்க
”என் பேரு கண்ணகி, கோவலனுடைய மனைவி, இதோ என் கணவனால கொல்லப்பட்டதா சொல்லப்படற சிலம்பரசன் இங்க இருக்கான், இவன்தான் அது, என் கணவன் நிரபராதி” என சொல்லி சிலம்புவை காட்ட அனைவருமே அதிர்ந்தார்கள்.
கண்ணகியோ ஜட்ஜிடம்
”தவறான தீர்ப்பை எழுதிட்டீங்க, என் கணவர் நல்லவரு, அவர் யாரையும் கொலை செய்யலை பாருங்க, இவன்தான் தப்பு செய்தவன் எல்லாத்துக்குமே இவன்தான் காரணம், இவனை விசாரிங்க உண்மை உங்க எல்லாருக்கும் தெரியும்” என சொல்ல ஜட்ஜோ தான் எழுதிய தீர்ப்பு இருந்த காகிதத்தை கிழித்தெறிந்துவிட்டுப் பேசினார்
”இத்தனை வருஷமா நான் இந்த பதவியில இருந்தப்ப ஏகப்பட்ட வழக்குகளை சந்திச்சேன், எல்லா வழக்கிலயும் நான் நியாயமான தீர்ப்புகளை தான் தந்தேன், என் மேல அனைவருக்கும் நல்ல மதிப்பு இருந்தது, நானும் பேர் புகழோட இருந்து இந்த நீதிபதி வேலையை சத்தியத்துக்கு கட்டுப்பட்டு செய்து வந்தேன், இதுதான் என்னுடைய கடைசி வழக்கு, இதுக்கு அப்புறம் நான் ரிட்டயர்டு ஆகப் போறேன்
என்னோட கடைசி வழக்குல கூட சரியான நீதி வழங்கனும்னு நான் ஆசைப்பட்டேன், ஆனா நானே தவறான தீர்ப்பை எழுத வேண்டியதா போச்சி, தப்பு என்னோடதுதான் இன்னும் நல்லா ஆழமா விசாரிச்சிருக்கனும், நான் ரிட்டயர்டு ஆகற நேரம் வந்ததால அவசரம் காரணமா இந்த வழக்கை சரிவர பார்க்காம முடிக்கப் பார்த்தேன், அதுதான் தப்பு, நான் பொறுமையா இருந்திருந்தா ஒரு நிரபராதிக்கு தண்டனை கிடைச்சிருக்காது, நான் செய்த தப்புக்கு எல்லாரும்