என்னை மன்னிக்கனும்” என கைகூப்பி மன்னிப்பு கேட்க அந்த இடமே அமைதியானது.
ஒரு நீதிபதியே தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் அங்கிருந்த மக்களுக்கு அவர் ஹீரோ போல உயர்வாக தெரிந்தார், அதில் மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அவர்களின் ஆரவாரம் முடிந்ததும் நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து
”இனி நான் அவசரப்படாம இந்த வழக்கை முடிச்சி நல்ல தீர்ப்பை வழங்கப்போறேன் விசாரனை ஆரம்பிக்கட்டும்” என சொல்ல கோவலன் தரப்பு வக்கீல்
”நன்றி யுவர்ஆனர்” என சொல்லிவிட்டு சிலம்பரசனிடம் வந்து
”உண்மையை சொல்லுங்க இதுக்கு மேலயும் உங்களால பொய் சொல்ல முடியாது, உங்களோட எல்லா தப்புகளும் வெளிச்சத்துக்கு வந்துடுச்சி சொல்லுங்க” என கேட்க சிலம்பரசனும் நடந்ததைச் சொன்னான்
”கோவலன் மேலயும் கண்ணகி மேலயும் எனக்கு கோபம், எப்படியாவது அவங்களை பழிவாங்கனும்னு ஆசைப்பட்டேன், ஆனா எனக்கு எந்த வழியும் கிடைக்கலை, நான் பழிவாங்க துடிக்கறதை கண்ட என் அப்பா அந்நேரம் என்னை ஊட்டிக்கு போக சொல்லி கட்டாயப்படுத்தினாரு
அதுல நானும் ஊட்டிக்குப் போனேன், அங்க மாதவியைப் பார்த்தேன், அவளை வைச்சி கோவலனையும் கண்ணகியையும் பழிவாங்கலாம்னு முடிவு எடுத்தேன், அவளை கடத்தி வைச்சிக்கிட்டு கோடிக்கணக்கில பணத்தை கேட்டா கண்டிப்பா கோவலன் தருவான்னு நம்பினேன், அதுக்காக அவளை பிடிக்கப் பார்த்தேன், தப்பிச்சிக்கிட்டே இருந்தா, ஒரு நாள் வசமா சிக்கினா அவளை பிடிக்கப் போனப்ப கோவலன் வந்து நிறுத்தினான், அவனை நான் அந்த இடத்தில எதிர்பார்க்கலை
எனக்கும் அவனுக்கும் சண்டை ஆரம்பிச்சது, அவன் அடிச்ச அடியில நான் மயங்கிப்