உரிமையாளரை கண்டுபிடித்து கையோடு முகவரியுடன் வந்து சேர்ந்தார்.
அந்த முகவரியைக்கண்டதும் கண்ணகி முகம் மலர்ந்தாள். மாதவியும்
”சரி வா கண்ணகி நேரமாச்சி, நாம போய் அந்த முகவரியில இருக்கறவங்களை பார்க்கலாம்” என சொல்ல அவளும் சரியென கிளம்பினாள், துணைக்கு மேனேஜரையும் அழைத்துக் கொண்டாள்.
மேனேஜருக்கு அந்த ஊரே அத்துபடி என்பதால் சீக்கிரமாகவே அவர்களை அந்த முகவரி இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அந்த முகவரியில் இவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த வீட்டின் முன் ஒரு சிகப்பு நிற கார் நின்றது. அதைக்கண்ட மாதவி கண்ணகியிடம்
”கண்ணகி இதுதான் இதேதான்” என்றாள்
”சரி வா உள்ள சிலம்புவுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருப்பாங்க போய் பார்க்கலாம்” என சொல்லி இருவரும் அந்த வீட்டின் காலிங் பெல் அழுத்த ஒரு வயதான பாட்டி கதவை திறந்தார்
அவருக்கு சரியாக கண்பார்வையும் தெரியவில்லை காதும் சரியாக கேளாமல் இருந்தார் அவரிடம் கண்ணகி சத்தமாக பேசி புரிய வைக்க முயன்றாள், ஆனால் அவரோ சரிவர பதில் சொல்லாமல் தடுமாற, மாதவியோ அவரை உள்ளே அழைத்துச் சென்று அந்த வீட்டையே சுற்றி முற்றிப் பார்த்தாள்
கண்ணகியும் ஏதாவது தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தாள், அந்த பாட்டியோ இவ்விரு பெண்களையும் தவறானவர்கள் என நினைத்து திட்டோ திட்டென திட்ட அதில் பொறுக்க முடியாமல் கண்ணகியோ அந்த பாட்டியிடம் நிதானமாக சத்தமாக பேசி புரிய வைக்க போராட மாதவியோ அந்த வீட்டை அலசி ஆராய்ந்து இறுதியில் தொய்வுடன் வந்து சேர்ந்தாள்
”கண்ணகி எதுவும் கிடைக்கலை இங்க இருக்கறது வேஸ்ட், வா சிலம்புவை வேற எங்காவது தேடலாம்” என சொல்ல கண்ணகியும் நொந்தபடியே எழுந்தாள், அவளுக்கு சட்டென ஏதோ