(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

என் கண்ணுக்குள்ள வைச்சி வளர்த்திருக்கேன், பெத்தவதான் தாயா இருக்கனும்னு இல்லை. வளர்த்தவளும் தாய்தானே, என்ன உன் அப்பன் பேச்சைக் கேட்டு சுயநலமா யோசிச்சி சொத்துக்காக நீ என்னையும் உன் மனைவியையும் கொல்வேன்னு நான் நினைச்சே பார்க்கலை”

  

”அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா ஒரு கெட்டவரோட பேச்சைக் கேட்டு அதன்படி நான் நடந்துகிட்டேன், அந்தாளு சொன்னதை வேதவாக்கா நினைச்சி அவர் சொன்னதை தட்டாம செய்தேன், நான் செய்தது தவறா சரியான்னு கூட தெரிஞ்சிக்காத முட்டாளா இருந்துட்டேன், சொத்து வேணும்ங்கற பேராசையில நான் எல்லாரையும் இழந்துட்டேன், நான் பாவிம்மா, நான் பாவி, நான் செய்த தப்புக்கு எனக்கு தண்டனை கிடைச்சே ஆகனும்”

  

”எப்ப நீ திருந்தினியோ அப்பவே நான் உன்னை மன்னிச்சிட்டேன் என்னை நீ கொன்னிருந்தாலும் உன்னை தண்டிக்க என்னால முடியலை, நீ எடுப்பார் கைபிள்ளையா வளர்ந்துட்ட, யார் என்ன சொன்னாலும் கேட்டு நடப்ப, சுயபுத்தியே உனக்கு வரக்கூடாதுன்னு  உன் அப்பா உன்னை முட்டாளாவே வளர்த்து அவர் சொன்னதை செய்ற அடிமை போல நடத்தினாரு, தப்பெல்லாம் அவரோடது இல்லைல்ல தப்பு எல்லாம் என்னோடதுதான்”

  

”என்னம்மா சொல்றீங்க“

  

”ஆமாம் பொன்முடி உங்கப்பாவை நான் கல்யாணம் செய்ததுதான் பெரிய தப்பு”

  

”நீ ஏன்மா எங்கப்பனை போய் கல்யாணம் செய்துக்கிட்ட, நீ யாரு இந்த வீட்டு மகராணி, ஊரே உன்னை வணங்கும் தெய்வம் போல வாழ்ந்தியேம்மா, எப்படிம்மா இந்தாளு கிட்ட மாட்டிக்கிட்ட”

  

”அது ஒரு பெரிய கதை பொன்முடி“

  

”சொல்லுங்கம்மா இன்னும் நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு, சொல்லுங்க உங்க கதையை சொல்லுங்கம்மா”

  

”அந்த கதையை கேட்டு இனி என்ன செய்யப் போற வேணாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.