(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

என்னாச்சின்னு தெரியாம கவலையில இருக்கேன், நீ ஒண்ணு உனக்கு பதில் சொல்றதுக்கு பதிலா நான் போய் என் வேலையை பார்க்கலாம் இங்கயே கிட” என சொல்லிவிட்டு பொன்முடியை அறையில் வைத்து தாள்பாள் போட்டுவிட்டு உயில் பத்திரம் தேடச் சென்றார்.

  

பொன்முடியோ முதல் முறை தனது பிறப்பு, தான் செய்த தவறு, ஆண்டாள் தன்னிடம் பாசம் காட்டிய தருணங்கள், ஆண்டாளை கொன்ற தருணம் என அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர வர மனம் திருந்தி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினான்.

  

அந்த சத்தம் மூடியிருந்த அறையை கடந்து ஒருவருக்கும் கேட்கவில்லை ஆனால் அப்படி அவர் அழுகும் சத்தம் நாச்சியாவிற்கு மட்டும் கேட்டது, அது கேட்டதில் இருந்து உள்ளுக்குள் வித்தியாசமான ஒரு உணர்வு எழுந்தது, அவசர அவசரமாக பொன்முடியை காணச் சென்றாள்.

  

பொன்முடியின் அறைக்கதவு தாள்பாள் போட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து அதை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல அங்கு பொன்முடி தரையில் படுத்து அழுதுக் கொண்டிருந்தார், குற்றம் செய்த நெஞ்சு உயிர் போகும் வலியை தந்தது போல கதறி கதறி அழ அழ அந்த அழுகை நாச்சியாவை ஒரு நொடியில் ஆண்டாளாக மாற்றியது

  

”மகனே பொன்முடி” என ஆண்டாளின் குரலில் பேசினாள் நாச்சியா, அந்த குரலைக் கேட்டதும் பொன்முடி என்னவென பார்த்தான். நாச்சியா இருந்தாள்

  

”அம்மா” என அழுதபடி அழைக்க

  

”ஏன்பா அழற என்னாச்சி யாரு அடிச்சா உன்னை” என பாசமாக கேட்க பொன்முடி பதறி எழுந்து நாச்சியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்

  

”அம்மா என்னை மன்னிச்சிடும்மா, என் பிறப்பு ரகசியம் எனக்கு இப்பதான் தெரிஞ்சது, நான் உங்க மகன் இல்லை உங்களை கொன்னவன் ஆனாலும் என் மேல நீங்க பாசம் பொழியறீங்களேம்மா”

  

”என்ன செய்றது உன்னை பெத்தவ நான் இல்லைதான் ஆனா, உன்னை கண்ணும்கருத்துமா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.