சம்மதிக்கவில்லை, கண்ணகியும் சரி மாதவியும் சரி அவனை தேடி வரவும் இல்லை, இப்படியே விட்டால் சரிவராது என நினைத்த கோவலன் ஊட்டியை விட்டு இறங்கி கோவை வந்தான்.
முதலில் கல்லூரிக்குச் சென்றான் அங்கு கல்லூரி சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது, கண்ணகி கண்ணகிதான் என நினைத்து பெருமைக் கொண்டபடியே கம்பெனிக்குச் சென்றான், அவன் இல்லையென்றாலும் மாதவி அந்த கம்பெனியை நல்லபடியாக பார்த்துக் கொண்டாள், அவளால் முன்னேற்றம் வந்தது, கம்பெனி லாபமாக ஓடியது, அதைக்கண்டு மாதவியை மனதுக்குள் பாராட்டியபடியே வீடு திரும்பினான்.
இவன் வந்த விசயம் தெரியாமல் கண்ணகியும் மாதவியும் ஒன்றாக ஸ்கூட்டியில் வீடு வந்து சேர்ந்தார்கள்.
”இன்னிக்கு உன்னோட வேலை எப்படி போச்சி மாதவி” என கண்ணகி கேட்க மாதவியோ
”நல்லாவே போச்சி இப்பதான் கம்பெனி ஓரளவுக்கு வந்திருக்கு”
”அது பத்தாது இன்னும் பல மடங்கு லாபம் சம்பாதிக்கனும், உள்நாட்டுலயே இருந்தா எப்படி வெளிநாடுவரைக்கும் உன் கம்பெனியோட பெயர் பரவனும் மாதவி”
”கண்டிப்பா அதுக்கான ஏற்பாடுகளை நான் தினமும் செய்துக்கிட்டுதான் இருக்கேன், ஆமா உன்னோட கல்லூரி எப்படியிருக்கு, ஏதாவது மாற்றம் செய்யப் போறியா மாணவர்கள் வரத்து அதிகமாகி ஊர் முழுக்க உன்னோட கல்லூரி பத்தின பேச்சுதான் வரனும், ஊர் என்ன ஊரு தமிழ்நாடு முழுக்க உன் கல்லூரியை பத்திதான் பேசனும், தமிழ்நாட்டுலயே சிறந்த கல்லூரியா கோவலன் கலைக்கல்லூரியை தேர்ந்தெடுக்கனும், உன்னை சிறந்த ஆசிரியையா தேர்ந்தெடுக்கனும், அவார்டு தரனும், அதை நான் பார்க்கனும், என்னோட ஆசையை நிறைவேத்துவியா கண்ணகி”
”நிச்சயமா நிறைவேத்துவேன்” என சொல்லிக் கொண்டே இருவரும் வீட்டிற்குள் வர அங்கு கோவலன் இருப்பதைக்கண்டு அதிர்ந்தார்கள், பின் மகிழ்ந்தார்கள், ஒரு சேர இருவரும் ஓடிவந்து அவனை கட்டியணைத்துக் கொள்ள அவன் திடுக்கிட்டான், இருவரையும்