”என்ன செய்யலாம்” என கண்ணகி மாதவியிடம் கேட்க மாதவியோ
”வேற வழியில்லை கண்ணகி இப்படியே எத்தனை நாள்தான் நாம தனியா வாழறது மனைவிங்கற உரிமையில நீதான் கோவலனோட வாழனும் அதுதான் சரி”
”ஆனா மனசாட்சிபடி பார்த்தா காதலியா நீதான் கோவலனோட வாழனும் அதுதான் சரி” என சொல்ல கோவலன் அதிர்ந்தான்
”என்ன மறுபடியும் முதல் இருந்து வர்றீங்க, சட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க இல்லைன்னா நான் சாமியாரா போயிடுவேன்” என சொல்ல அவர்கள் இருவரும் கலகலவென சிரித்தார்கள்
”என்ன என்னால முடியாதுங்கறீங்களா செய்து காட்டவா இல்லை என்னோட வாழ வர்றீங்களா” என கேட்க இரு பெண்களும் மறுபடியும் யோசிக்கலானார்கள். அவர்களையே ஆர்வமாக பார்த்தபடி இருந்தான் கோவலன், முடிவில் கண்ணகியும் மாதவியும்
”விதிபடி நடக்கறோம்” என்றார்கள் அதில் கோவலனுக்கு நிம்மதியே பிறந்தது
”இதப்பாருங்க நாணயத்தை சுண்டறேன், அதுல கண்ணகி வருதோ மாதவி வருதோ எனக்குத் தெரியாது யாராவது ஒருத்தர்தான் வருவாங்க, அப்ப சண்டை போடக்கூடாது சரியா”
”கண்ணகின்னு வந்தா நான் அவளுக்காக என் காதலை விட்டுக்கொடுத்துடறேன்” என்றாள் மாதவி அதற்கு கண்ணகியோ
”மாதவின்னு வந்தா மனைவிங்கற உரிமையை நான் விட்டுக்கொடுத்துடறேன்” என்றாள் அதைக்கேட்ட கோவலனோ
”யார் வந்தாலும் சரி மத்தவங்க புது வாழ்க்கையை ஆரம்பிக்கனும் முடியாதுன்னு சொல்லக்கூடாது” என சொல்ல அவர்கள் மறுபடியும் யோசிக்க அவனோ நொந்துப் போனான்.