அதைக்கேட்டு அவ்விரு பெண்களும் அமைதியானார்கள்.
”எப்படி நீங்க நட்பால ஒண்ணா இருக்கீங்களோ அதே போல என் விசயத்திலயும் ஒண்ணா இருந்தீங்கன்னா நாம 3 பேரும் சந்தோஷமா வாழலாம் என்ன சொல்றீங்க” என கேட்க கண்ணகியும் மாதவியும் குழம்பினார்கள், பலமாக யோசித்தார்கள்.
அவர்களால் சரியான முடிவு எடுக்க இயலவில்லை. அவர்களுக்கு நேரம் தந்தான், 3 நாட்கள் கடந்த நிலையிலும் இரு பெண்களாலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் கோவலனிடம் வந்து நின்றார்கள். அவனோ
”இப்ப தெரியுதா என்னோட கஷ்டம், சரி உங்களாலயும் முடிவு எடுக்க முடியலை என்னாலயும் முடிவு எடுக்க முடியலை வேணும்னா ஒண்ணு செய்யலாம்”
”என்ன” என கண்ணகி கேட்க அவனோ அவர்களிடம்
”உங்ககிட்ட நாணயம் இருக்கா”
”எதுக்கு”
”கொடுங்க சொல்றேன்” என சொல்ல கண்ணகி உடனே ஒரு ரூபாய் நாணயத்தை தர அதை வாங்கியவன் அவர்களிடம்
”இதப்பாருங்க இந்த நாணயம்தான் நம்ம விதி. தலை விழுந்தா கண்ணகியோட என் வாழ்க்கை பூ விழுந்தா மாதவியோட என் வாழ்க்கை, இதுக்கு நீங்க சம்மதிக்கனும் விதிவழி நடக்கலாம் என்ன சொல்றீங்க” என கேட்க இரு பெண்களும் முதலில் அதிர்ந்தார்கள்
”ஒருத்தர் வாழ்க்கையை இன்னொருத்தர் பங்கிட்டு வாழ முடியாதுங்கறீங்க, ஒருத்தருக்காக இன்னொருத்தர் விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்க, அதுக்காக என்கூட வாழவும் வரமாட்டேங்கறீங்க, இப்படி நாம 3 பேரும் தனித்தனியா வாழறதை விட விதிபடி என்ன நடக்குதோ அதை வைச்சி வாழ்ந்துக்கலாம் சரியா” என கேட்க கண்ணகியோ மாதவியை பார்க்க மாதவியோ கண்ணகியை பார்த்தாள்