(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

விட்டுப்பிரிந்து நின்று

  

”என்னை மறந்துட்டீங்களா நீங்க ரெண்டு பேரும்“

  

”என்னது மறக்கறதா அது நாங்க செத்தாலும் நடக்காது” என்றாள் மாதவி

  

”ஒவ்வொரு நாளும் உங்களைதான் நாங்க நினைச்சிக்கிட்டே இருக்கோம், எங்களை போய் இப்படி தப்பா பேசறீங்களே” என பொங்கினாள் கண்ணகி

  

”அதுசரி கல்லூரி மேலயும் கம்பெனியும் மேலயும் வைச்சிருக்கற அக்கறையையும் பாசத்தையும் என் மேல வைக்க தவறிட்டீங்களே”

  

”என்ன இப்படி பேசறீங்க, உங்க கல்லூரியை பெரிய அளவுக்கு கொண்டு வர நான் எவ்ளோ கஷ்டப்படறேன்னு தெரியுமா உங்களுக்கு” என கண்ணகி சொல்ல அதற்கு மாதவியோ

  

”உங்க கம்பெனியை வெளிநாடு வரைக்கும் பிரபலமாக்கனும்னு ராத்திரியும் பகலுமா நான் போராடிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்களே” என சண்டைக்கு நிற்க அவனோ

  

”எல்லாம் சரி என்னை அம்போன்னு விட்டுட்டீங்களே“

  

”என்ன செய்றது நீங்களாதானே போனீங்க நீங்களே வருவீங்கன்னு நினைச்சோம் அதான் வந்துட்டீங்களே“

  

”எப்படி வந்தேன் நானா வந்தேன், நீங்க ஒண்ணும் என்னை தேடி வரலை என்னை கூப்பிடவும் இல்லை”

  

”இப்ப என்ன அதுக்காக சண்டை போடப்போறீங்களா எங்களோட”

  

”ஆமாம் உங்களால நான் தனியா  ஊட்டியில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாம சாப்பிட பிடிக்காம தூங்க முடியாம அவதிபட்டேன் தெரியுமா” என்றான் பாவமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.