”அவன் யார்ன்னு தெரிஞ்சி பேசறியா”
”அப்பா எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா, எனக்காக அவர் நிறைய காயம் பட்டிருக்காருப்பா, எங்க ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்கு, நானும் இந்த ஊரு ஒண்ணாகனும்னு ஆசைப்படறேன், அதையேதான் அவரும் ஆசைப்படறாரு, நான் அவரை கல்யாணம் செய்துக்கிட்டா பிரிஞ்சிருக்கற இந்த ஊர் ஒண்ணாயிடும்பா, தயவு செய்து இந்த விசயத்தை மறுக்காதீங்கப்பா நீங்க மறுத்தீங்கன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்பா” என கைகூப்பி கெஞ்ச ஆவுடையப்பன் மனம் இறங்கினார்
”இவ்ளோ தூரம் நீ போன பின்னாடி நான் பேச என்ன இருக்கு சரி ஒரு நல்ல நாள் பார்த்து உனக்கும் ஈஸ்வரனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்” என சொல்ல மகிழ்ச்சியில் திளைத்தாள் ஆண்டாள்.
ஆவுடையப்பன் மகளிடம் பேசியதை ஈஸ்வரனிடம் சொல்ல அவனும் மகிழ்ந்தான். ஆனாலும் உடனே ஒப்புக் கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தான்
”நானா நான் எப்படி என்னைப் போய் உங்க மகளுக்கா எனக்கு என்ன தகுதியிருக்கு சே சே இது நடக்க கூடாதுங்கய்யா”
”ஈஸ்வரா ஏன் இப்படி பேசற, என் பொண்ணு உன்னை விரும்பறா, நீயில்லைன்னா அவள் உயிரோட இருக்க மாட்டேன்னு சொல்றாளே வேற நான் என்ன செய்றது சொல்லு”
”அவங்களை என் கூட்டாளிகள் கிட்ட இருந்து காப்பாத்தினதால இரக்கப்பட்டு அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்ங்கய்யா, ஆனாலும் நான் எப்படி அவங்களை என்னால முடியாதுங்கய்யா”
”ஈஸ்வரா நீ சொன்னா மொத்த கீழவீதியும் உன் பேச்சு கேட்டு நடக்கும், மேலவீதி என் பேச்சை கேட்டு நடக்கும், எத்தனை நாள்தான் கீழவீதியும் மேல வீதியும் சண்டை சச்சரவுன்னு இருக்கறது சொல்லு”