அறிந்ததும் ஊர் மக்கள் மகிழ்ந்தார்கள், ஊர் இனி ஒன்றாகிவிடும் என எதிர்பார்த்தார்கள். அதற்காகவே ஆண்டாள் சங்கமேஸ்வரன் திருமணத்தை ஆவுடையப்பன் வெகுவிமரிசையாக செய்து வைத்தார், அந்த திருமணத்திற்கு ஊரே கூடிவிட்டது. பாகுபாடின்றி கீழவீதியும் மேலவீதியும் அந்த திருமணத்தில் கலந்துக் கொண்டது. அப்படி மக்கள் ஒற்றுமையாக இருப்பதைக் கண்ட ஆண்டாள் அகமகிழ்ந்தாள். தனது ஆசை நிறைவேறியதை நினைத்து அதற்கு காரணமாக இருந்த சங்கமேஸ்வரனை கடவுளாக மனதில் பூஜித்தாள்.
அனைத்தும் சில காலங்கள்தான் ஆவுடையப்பன் மறைவு வரை காத்திருந்த சங்கமேஸ்வரன் அவரின் இறப்பிற்கு பின் தனது உண்மையான முகத்தை வெளிகாட்டினான். மெல்ல மெல்ல மக்களிடம் பேசி பிரிவை உண்டாக்கினான், சின்ன சின்ன பிரிவுகள் பெரிதாகி மீண்டும் அந்த ஊர் மேலவீதி கீழவீதி என பிரிந்தது. இதை அறிந்த ஆண்டாள் கலங்கினாள். ஈஸ்வரனிடம் கெஞ்சினாள் ஆனால், ஈஸ்வரனோ தன்னால் எதையும் செய்ய இயலாது, மக்களேதான் இனி திருந்த வேண்டும் என கைவிரித்தான், இதில் ஆண்டாளுக்கு மக்கள் மீதே கோபம் எழுந்தது, எவ்வளவு பாடுபட்டு ஊரை ஒன்றாக்கினால் இப்படி அவர்களுக்குள் பிரிந்து ஊரையே இரண்டாக்கிவிட்டார்களே என நினைத்து நொந்துப் போனாள், அன்றில் இருந்து அவள் அந்த ஊருக்காக எதையும் செய்வதில்லை, விட்டிற்குள்ளேயே முடங்கிப் போனாள்
அதுவரை அவளை அந்த ஊரே தெய்வமாக பார்த்தது கைகூப்பி வணங்கியது. ஆனால் அதன்பிறகு அவளை அந்த ஊர்காரர்கள் எவருமே பார்த்ததில்லை, அவளின் இறப்பு அன்றுதான் ஊரே அவளின் சடலத்தை பார்த்தது.
நடந்த கதையை சொல்லி முடித்த ஆண்டாள் பொன்முடியிடம்
”இதுதான் நடந்தது உங்கப்பாவோட உண்மையான முகம் தெரிஞ்சபின்னாடி என்னையும் அவர் வெறுக்க ஆரம்பிச்சாரு”
”நான் உங்க பிள்ளையில்லைன்னு உங்களுக்கு தெரியுமா அம்மா“
”தெரியும் ஆனா ரொம்ப வருஷம் கழிச்சிதான் அது தெரிய வந்தது, அதைப்பத்தி கேட்க கூட எனக்கு மனசு வரலை ஏன்னா நான் உன்னை என் பிள்ளையாவே பார்த்துட்டேன், இனிமேல அதை மாத்திக்க என்னால முடியலை, இப்பவும் நீ எனக்கு மகன்தான்“