(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”ஆமாம் எழுதி வைச்சேன் ஆனா, அதை உங்கப்பா மறைச்சிட்டாரு”

  

”அந்த உயில்படி இந்த மொத்த சொத்தும் யாருக்குமா எழுதினீங்க”

  

”யாருக்கு எழுதியிருப்பேன்னு நீ நினைக்கற”

  

”நீ அதை யாருக்கு எழுதியிருந்தாலும் சரி எனக்கு சம்மதம்மா, நாச்சியாவை நினைச்சாதான் வருத்தமா இருக்கு, எங்கப்பா அவளை ஏதாவது செய்துட்டா என்ன செய்றதும்மா”

  

”அவளை நான் பார்த்துக்கிறேன் பாவம் அவள் பிறந்தது என்னவோ அரண்மனையிலதான் ஆனா, வாழ்ந்தது ஏழை குடிசையில பெரிசா அவள் எந்த சுகத்தையும் அனுபவிச்சிருக்க மாட்டா”

  

”அப்ப ரூபாவதி“

  

”அவளுக்கென்ன குறைச்சல், பணக்காரி அவளுக்குன்னு அவளோட அப்பா அம்மா இருக்காங்க, பணம் இருக்கு, உன் அப்பா அவளை விட்டுக் கொடுக்க மாட்டாரு ஆனா, நாச்சியா அப்படியில்லை அவளுக்கு அகத்தியன் மட்டும்தான் அடையாளமே, என்னிக்கு அந்த உயில் கிடைக்குமோ அன்னிக்கு அவளை பத்தின உண்மைகளும் இந்த உலகத்துக்கு தெரியவரும்”

  

”அந்த உயிலை அங்கமுத்து தேடிக்கிட்டு இருக்கானே“

  

”தேடட்டும் உங்கப்பா கையில கிடைச்சா அதை எரிச்சி அழிச்சிடுவாரு, அதே அவன் கையில கிடைச்சா எல்லாருக்கும் உண்மையை சொல்வாரு”

  

”7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்திருந்து என்ன பிரயோசனம் யாருமே நிம்மதியா இல்லையே” என பொன்முடி புலம்ப அதற்கு ஆண்டாள்

  

”கவலைப்படாத எல்லாம் ஒரு நாள் மாறும் நாச்சியா எல்லாத்தையும் மாத்துவா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.