(Reading time: 6 - 12 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

இதுன்னு தான் பேசுறார். திடீர்னு இரண்டு மூணு நாலு காணாம போயிட்டார். திரும்ப அவரே வரார். கேட்டா மயக்கம் போட்டுட்டேன்னு சொல்றார். இதெல்லாம் சாதாரணமாவா உங்களுக்கு தோணுது?"

  

ராகுல் யோசித்தான்.

  

"அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன ஷூட்டிங் இன்சிடன்ட்ல கூட வினாயக்குக்கு தொடர்பு இருக்கலாம். இன்ஸ்பெக்டர் பேசினதை வச்சுப் பார்த்தா அவருக்கும் அந்த சந்தேகம் இருக்கும்னு நினைக்கிறேன்!"

  

"எனக்கும் அப்படி தான் தோணுது ஐஸ்!"

  

"இந்த மாதிரி ஸ்டேபிலா இல்லாதவர் கூட உங்க தங்கை பழகுறது நல்லது கிடையாது. அவ நன்மைக்காக தான் சொல்றேன்!"

  

"எனக்குப் புரியுது ஐஸ். அம்மா கிட்ட சொல்லி அவளுக்கு சீக்கிரமே கல்யாணத்துக்கு நல்ல வரன் பார்க்க சொல்றேன்!"

  

"இது நல்ல ஐடியா. என் குடும்பத்திலேயே கூட என் பெரியப்பா மகன் ஒருத்தர் இருக்கார். நல்லா படிச்சிருக்கார். சொந்தமா கம்பெனியும் வச்சிருக்கார். அவரை சும்மா இங்கே வர சொல்றேன். நீங்க பேசிப் பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா அம்மா கிட்ட ப்ரியம்வதாக்கு அவரை பேசலாமான்னு கேட்டுப் பாருங்க~"

  

"தேங்க்ஸ் ஐஸ். நீ சொல்ற மாதிரியே செய்யலாம். என் தங்கை மேலே உனக்கு எவ்வளவு அக்கறை!"

  

"அவ உங்க தங்கை ராகுல். எனக்கு எப்படி அக்கறை இல்லாம போகும்?"

  

ஐஸ்வர்யா ஒயிலாக ராகுல் பக்கம் தன் கையை நீட்டினாள். வரம் கிடைத்ததுப் போல சந்தோஷத்துடன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான் ராகுல்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.