(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”ஓகே தருண் இளங்கோ பேரை நான் எடுக்கலை போதுமா”

  

”ஓகே”

  

”டைம் ஆயிடுச்சி ரூம்க்கு போகலாமா”

  

”நீ போ நான் இன்னும் கொஞ்ச நேரம் வாக் போகலாம்னு இருக்கேன்”

  

”ஏன்”

  

”இந்த சூழ்நிலை எனக்கு பிடிச்சிருக்கு, மறுபடியும் லண்டன் வர்ற வாய்ப்பு எனக்கு கிடைக்காமலும் போகலாம் இல்லையா அதனால இருக்கற நேரங்களை நான் மிஸ் பண்றதா இல்லை நான் என்ஜாய் பண்ணிட்டு வரேனே ப்ளீஸ்”

  

”ஓகே தருண் நான் போறேன்” என ஹரிணி சொல்லிவிட்டு சென்றதும் தருண் வேக வேகமாக சென்ற இடம் மதுபானம் கிடைக்கும் இடம்தான். பவானியை மறக்க குடித்தவன் இப்போது இளங்கோவின் மீதான கோபத்தில் குடிக்கலானான்.

  

மறுநாள் பொழுது விடிந்தது, ஹரிணி தருணை தேடினாள் அவன் அறையின் தரையில் படுத்திருந்தான் தருண், அவனை அப்படிக்கண்டதும் துடித்துப் போனாள் ஹரிணி

  

”தருண் தருண்” என அவனை போட்டு உலுக்க அவனும் எழுந்துக் கொண்டான்

  

”ஹரிணி ஓ விடிஞ்சிடுச்சா”

  

”என்ன தருண் இது இங்க போய் படுத்திருக்கீங்க”

  

”சாரி ஹரிணி மறுபடியும் தூக்க கலக்கத்தில உன் பக்கத்தில வந்து படுத்துடக்கூடாதுல்ல அதான் இங்க படுத்துட்டேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.