”உனக்காகதான், உன் மனசு மாறனும், நீ சந்தோஷமா இருக்கனும் அதுக்குத்தான்”
”ஓ அப்படியா இளங்கோ கூட இப்படித்தான் எதையாவது செய்து என்னை சர்ப்ரைஸ் செய்துக்கிட்டே இருப்பான்” என சொல்ல காண்டாகி கத்தினான் தருண்
”ஹரிணி ப்ளீஸ் இளங்கோவை நினைக்காத”
”சாரி தருண், நான் மறக்க நினைச்சாலும் நீதான் நினைவு படுத்தற, நான் என்ன செய்றது சொல்லு”
”ஓகே நோ ப்ராப்ளம் வா டின்னர் ரெடியாயிருக்கு சாப்பிடலாம்” என சொல்ல அவளும் சரியென அவனுடன் டின்னர் சாப்பிடலானாள்.
இரவு உறங்க தருண் படுக்கைக்கு வர ஹரிணி சோபாவில் படுக்கச் சென்றாள்
”என் மேல நம்பிக்கையில்லையா ஹரிணி, நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்”
”ரிலாக்ஸ் தருண் நீ என்கூட இருக்கறப்ப இளங்கோ ஞாபகம் வருது, எங்க என்னையும் மீறி உன்னை இளங்கோன்னு நினைச்சி உன் மேல கைகால் போட்டுட்டா, என்ன செய்றது நான் என் லிமிட்ல இருக்கனும்லயா”
”புரியது குட்நைட்”
”குட்நைட்” என சொல்லிவிட்டு அவள் உறங்க தருணுக்கு உறக்கமே கெட்டது.
மறுநாள் அவனை அழைத்துக் கொண்டு கம்பெனி வேலையாக சென்றாள், நேரம் சென்றதே தெரியவில்லை, களைப்புடன் அறைக்கு வந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டு தனித்தனியாக உறங்கினார்கள். அடுத்தடுத்த நாளும் இதே நிலைமைதான் இருவரும் பேசிக் கொள்ள நேரமே கிடைக்கவில்லை, ஒருவழியாக வந்த வேலை முடிந்தது தருணோ அவளிடம்