(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

கையோட கல்யாணம் செய்துக்கிட்டோம், எங்க இரண்டு பேரோட குடும்பமும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, அவங்களை எதிர்த்து நாங்க புது வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சோம், வேலையில்லை, கையில பணம் இல்லை ஆனாலும் எங்க காதல் ரொம்ப ஸ்டராங்கா இருந்தது, ஏதேதோ வேலைகளைப் பார்த்தோம், எங்களுக்குன்னு சின்னதா ஒரு வாடகை வீட்ல தங்கினோம் சந்தோஷமா இருந்தோம் ஆனா, எங்க சந்தோஷம் நிலைக்கலை, என்னதான் நிவேதினி மாடர்ன் டைப்னாலும் என்னை அவளுக்கு பிடிச்சி ஏத்துக்கிட்டா, அவளால கஷ்டங்களை சமாளிக்க முடியலை என்னை கல்யாணம் செய்தது தப்போன்னு கூட யோசிச்சா, நானும் அவளுக்கு துணையா இருந்தேன் ஆனாலும் அவள் ஒருநாள் என்கூட வாழ பிடிக்காம தற்கொலை செய்துக்கிட்டா”

  

”என்னது தற்கொலையா ஓ மை காட்” என அலறினாள் ஹரிணி

  

”ஏய் ரிலாக்ஸ் ப்ளீஸ் என்னால நிவேதினி வாழ ஆசைப்படற ஆடம்பரமான வாழ்க்கையை தரமுடியலை, இளவரசி போல வளர்ந்தவ, ஏழை பொண்ணா வாழ பிடிக்கலை, இருக்கற கஷ்டத்தில குழந்தை எதுக்குன்னு தள்ளி வைச்சோம் லைப் செட்டில் ஆன பின்னாடி குழந்தையை பத்தி யோசிக்கலாம்னு இருந்தோம், நல்ல வேலை அமையலை, அவள் எதிர்பார்த்த வேலை கிடைக்கலை, அப்படி இப்படி மோதி எனக்கு ஐடியில வேலை கிடைச்சது, இனி கஷ்டமில்லை வாழ நினைச்ச வாழ்க்கையை வாழலாம்னு அந்த சந்தோஷமான விசயத்தை அவள்கிட்ட சொல்ல வந்தேன் ஆனா, அவள் அதுக்குள்ள அவசரப்பட்டு ரயில் முன்னாடி விழுந்து தற்கொலை செய்துக்கிட்டா” என சொல்லி அவன் தேம்பி தேம்பி அழ ஹரிணிக்கு என்னவோ போலானது.

  

ஏதும் பேசாமல் இருந்தவளைக் கண்டு அதிர்ந்த தருணோ

  

”என்னாச்சி ஹரிணி உனக்கும் என்னை பிடிக்காம போச்சா”

  

”நான் அப்படி சொல்ல வரலை, நிவேதினியோட முட்டாள்தனத்தை நினைச்சி கோபம் வருது”

  

”எனக்கும் கோபம்தான், அவளுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டுட்டு வந்தேன் ஆனா, கடைசியில ஆடம்பர வாழ்க்கை கிடைக்கலையேங்கற துக்கத்தில அவள் தற்கொலை செய்துக்கிட்டது எனக்கு பெரிய அவமானமாயிடுச்சி, அவள் இறந்த பின்னாடி என் அப்பா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.