(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்தேன், அவங்க என்னை ஏத்துக்கிட்டாங்க கொஞ்ச நாளா நான் நிவேதினியை பத்தியே நினைச்சி நினைச்சி வாழ பிடிக்காம அலைஞ்சேன், என்னோட நிலைமையை பார்த்து பயந்த என் அப்பா அம்மா எனக்காக பவானியை பார்த்து கல்யாணம் செய்து வைச்சாங்க”

  

”ஓ அப்படியா“

  

”ஆமாம் ஹரிணி எனக்கு எப்பவுமே நிவேதினியோட நினைப்பு வராது, அவள் ஒரு ஏமாத்துக்காரி, காதலுக்காக உயிரை கூட தருவேன்னு சொல்வா ஆனா, ஆடம்பர வாழ்க்கை வாழ முடியலைன்னு உயிரை விட்டா ஆனா, பவானி அப்படியில்லை, என்னை புரிஞ்சிக்கிட்டவ நிவேதினியால நான் பட்ட கஷ்டத்தை துடைச்சவளே அவள்தான் ஆனா, அவளும் இப்ப என்கூட இல்லை அவள் இருந்தவரைக்கும் நான் சந்தோஷமா இருந்தேன்”

  

”ஓ சாரி தருண் உங்க மனசுல இப்படியொரு காயம் இருக்கும்னு, நான் எதிர்பார்க்கலை“

  

”இதை சொன்னா நீ வருத்தப்படுவேன்னுதான் நானும் சொல்லலை“

  

”ஆமா பவானி எப்படி இறந்தாங்க”

  

”ரயில் விட்டு இறங்கறப்ப கால் மிஸ்ஸாகி ரயில் தண்டவாளத்தில விழுந்து இறந்துட்டா”

  

”அவங்களும் தற்கொலை செய்துக்கிட்டாங்களா“

  

”சே சே இல்லையே, அவளை நான் மகாராணி போல பார்த்துக்கிட்டேன், என் கண்ணுக்குள்ள பொத்தி வைச்சி சந்தோஷமா பார்த்துக்கிட்டேன், அவளும் நானும் ஒரே கம்பெனியில வேலை பார்த்தோம், அப்போ நான் ஹெச் ஆரா இருந்தேன், அவள் டீம் லீடரா இருந்தா அவளை நான் விட்டு ஒரு நாளும் இருந்ததில்லை, அவளை எங்கயும் நான் விட்டதில்லை கூடவே இருப்பேன், அவளை அப்படி சப்போர்ட் பண்ணுவேன், என்னவோ கடவுள் என்னை சோதிச்சிட்டாரு நிவேதினியை என்கிட்ட பறிச்ச மாதிரி பவானியை என்கிட்ட இருந்து பறிச்சிட்டாரு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.