(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”என்ன ஹரிணி இது ரெண்டு பேரும் ஒண்ணா போறோம், எதுக்காக வேற வேற சீட்ல இருக்கற மாதிரி டிக்கெட் எடுத்த ஏன் ஒண்ணா போனா தப்பா“

  

”அப்படியில்லை தருண் இது பர்சனல் டூர் கிடையாது, அபிஷியல் கம்பெனி விசயமா நாம போறோம், ஏற்கனவே எனக்கான டிக்கெட் கம்பெனியே எடுத்து கொடுத்திடுச்சி, லாஸ்ட் மினிட்ல நீ வந்ததால உனக்காக நான் டிக்கெட் எடுத்தேன் அதனால இப்படியாயிடுச்சி சாரி தருண்”

  

”அப்போ ரிட்டர்ன் வரும் போதும் இப்படித்தானா“

  

”ஆமாம் தருண்” என சொல்ல அவன் கடுப்பாகி அவனுக்கான இருக்கையில் சென்று அமர ஹரிணியோ கண்களால் அவனிடம் சாரி என சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். பிளைட்டும் கிளம்பியது. முதல் அனுபவம் என்பதால் தருண் பதட்டமானான். பயந்தான் அவனது பதட்டத்தைக் கண்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிரிக்க அவனுக்கு கோபம் ஏறியது.

  

”ஹரிணி ஹரிணி” என அலறினான் அதில் ஹரிணியோ

  

”என்னாச்சி தருண்”

  

”எனக்கு பயமாயிருக்கு ப்ளீஸ் என்கிட்ட வா” என அலற அவளோ

  

”பிளைட் பறக்கிற நேரம் என்னால அங்க வரமுடியாது கொஞ்ச நேரம்தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்” என சொல்லிவிட தருணின் நிலைமை மோசமானது. சட்டென கண்கள் மூடினான். பவானியின் உருவம் தெரிந்தது. சட்டென கண்கள் திறந்தான் அதிர்ந்தான்

  

”எதுக்கு பவானி நினைப்பு வருது என்னாச்சி எனக்கு” என தன்னையே குழப்பமாக கேட்டுக் கொண்டான் அந்த இடைவெளியில் அவனது பயம் ஓடிவிட்டது. குழப்பத்துடனே பயணத்தினான். பாதியில் ஹரிணி என்ன செய்கிறாள் என பார்க்க வந்தான், அவளோ இளங்கோவின் போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்கள் மூடியிருந்தாள். அவள் உறங்குகிறாளோ என நினைத்தான் ஆனால் இல்லை அவள் கண்ணின் ஓரத்தில்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.