“நீ வர்றது அவங்களுக்கு தெரியாது”
”நீ இன்பார்ம் பண்ணலையா ஹரிணி“
”அவசியம் இல்லைன்னு நினைச்சேன் சாரி, இதுக்காக நீ கோச்சிக்க வேணாம்”
“ஓகே வா போலாம்” என லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு சென்றான். அவளும் அவனுமாக அவர்களை வரவேற்க வந்தவனுடன் வண்டியில் கிளம்பினார்கள். வண்டியோ பிரபலமான ஓட்டலில் சென்று நின்றது, அவர்களுக்கு என ஒரே ஒரு அறை புக் செய்யப்பட்டிருக்க அந்த அறையில் இப்போது ஹரிணியும் தருணும் இருந்தார்கள்.
தருணோ அந்த புது சூழ்நிலையை ரசித்தான். பால்கனி வழியாக வெளி உலகைக்கண்டு பரவசமானான். அவனது செயலைக் கண்டு சிரித்தபடியே வந்தாள் ஹரிணி
”என்ன தருண் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல”
”ஆமாம் ஹரிணி லண்டன் எவ்ளோ அழகா இருக்கு பாரேன்”
”புதுசா பார்க்கறதால உனக்கு அப்படி தெரியலாம் ஆனா, எனக்கு லண்டன் சாதாராணமாதான் தெரியுது”
”அது உன்னோட மனநிலைமையை பொறுத்திருக்கு ஹரிணி எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா இருக்கற வழியைப் பாரு”
”முயற்சி செய்றேன் சரி நான் ப்ரெஷாயிட்டு வரேன்”
”நீ வர்ற வரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு வரேன்” என சொல்ல ஹரிணியும் தனது லக்கேஜிடம் சென்றாள், அதில் இருந்து தேவையான துணிகளை எடுத்துக் கொண்டவள் இளங்கோவின் போட்டோவைத் தேடினாள்.