(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தருணோ நன்றாக வேடிக்கைப் பார்த்துவிட்டு ஹரிணியிடம் வர அவளோ தனது லக்கேஜில் இருந்தவற்றை தரையில் கொட்டிவிட்டு பரபரப்பாகத் தேடலானாள், அதைக்கண்டு குழம்பிய தருணோ

  

”ஹரிணி என்ன செய்ற”

  

”ஐயோ தருண் இளங்கோவோட போட்டோவை காணலை தருண் நீ பார்த்தியா சொல்லு” என கண்கள் கலங்க சொல்ல அதற்கு தருணோ

  

”சாரி ஹரிணி எங்க தேடினாலும் அது உனக்கு கிடைக்காது”

  

”வாட் என்ன சொல்ற நீ, எனக்குப் புரியலை”

  

”நான்தான் அந்த போட்டோவை பிளைட்லயே விட்டுட்டு வந்துட்டேன்” என சொல்ல ஹரிணிக்கு திக்கென்றது

  

”ஏன் அப்படி செய்த”

  

”கொஞ்சம் யோசிச்சிப்பாரு கம்பெனி விசயமா இங்க வந்தோம், ஒரு வாரம் தங்க போறோம் நீ இளங்கோ போட்டோவை வைச்சிக்கிட்டு அவனை நினைச்சி கவலையோட இருந்தா, வேலை கெடும் உன்னை நம்பி நான் வந்திருக்கேன், அதோட நீ அவனை நினைச்சி கவலைப்பட்டு அழறது எனக்கு சுத்தமா பிடிக்கலை, அதான் போட்டோவை ப்ளைட்லயே விட்டுட்டு வந்துட்டேன்” என சொல்ல அவளுக்கு கோபம் தலைக்கேறி சட்டென அவனின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை, அதை அவனே எதிர்பார்க்கவில்லை

  

”உன் லிமிட்ல நீ இரு தருண்” என கோபமாக சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு வெளியேறி செல்ல தருணிற்கு கோபமும் எரிச்சலும் வந்தது. ஹரிணியை தேடிச் சென்றான் அவளோ அந்த ஓட்டல் முன் இருந்த பார்க்கில் அமர்ந்து அழுதுக் கொண்டிருக்க அவளின் அழுகை அவனை கட்டிப்போட்டது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.