வழியில்லை அவளுக்கு”
“உன் காட்டுல மழை பெய்யுது போல சரி சரி நான் கிளம்பறேன்”
”இந்த விசயத்தை எங்கயும் சொல்லிடாத“
”சத்தியமா சொல்ல மாட்டேன் ஆனா, ஒரு விசயம் ஹரிணி அப்பாவிதான் ஆனாலும் புத்திசாலி, ஒரு முறை உன் மேல சந்தேகம் வந்தாலும் நீ பட்ட பாடு எல்லாம் வீணாயிடும்“
”அவளுக்கு என் மேல என்னிக்குமே சந்தேகம் வராது, ஏன்னா ஹரிணியோட நான் உண்மையா வாழப் போறேன், அவளை நான் இழக்க போறதில்லை நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு” என சொல்ல அவன் சென்றுவிட ஹரிணியை தேடி வந்தான் தருண்.
ஹரிணியோ மிகவும் பயந்திருந்தாள் தருண் வரவும் பயத்தில் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள், அந்த அணைப்பு அவனை பைத்தியமாக்கியது ஆனாலும் அவளிடம் நேர்மையாக நடப்பவன் போல நடிக்கலானான்
”ஹரிணி பயப்படாத ப்ளீஸ் இப்படி வா” என அவளை தன்னை விட்டு தனியாக நிறுத்தி அவளைப் பார்க்க அவளோ கண்கள் கலங்கியிருந்தாள்
”எதுக்கு இப்ப அழற அதான் ஒண்ணும் ஆகலைல்ல“
”ஆனாலும் நான் ரொம்ப பயந்துட்டேன் தருண்“
”இதுக்குதான் சொன்னேன், உனக்கு ஒரு துணை தேவைன்னு நீதான் கேட்கலை”
”என்னால இளங்கோவை மறக்க முடியலை, அவன் இடத்தில உன்னை வைக்க முடியலை”
”வைச்சித்தான் பாரேன்”
”புரியலை”