”அர்ஜூன் யார் அந்த பொண்ணு” என்றான்
”தெரியலண்ணா” என சந்தேகமாக கூறினான் அர்ஜூன் அதற்கு ரிஷியோ
”நம்ம வீட்டுக்கு பொண்ணுங்க வராங்கன்னா ஆச்சர்யம்தான்”
”ஏன் வெண்ணிலா கூட வந்திருக்கேண்ணா” என அர்ஜூன் கூற
”அவ பொண்ணே கிடையாது” என்றான் ரிஷி சிரித்துக்கொண்டே அதற்கு அர்ஜூன் அவனிடம்
”அதுவும் சரிதாண்ணா என்னன்னு பார்க்கலாம் வாங்க” என கூறவும் ரிஷியும் தன் ஜீப்பை கேட் அருகில் நிறுத்திவிட்டு ஜீப்பை விட்டு இறங்கி அவளிடம் வந்து நின்று அவளை ஏற இறங்க பார்த்தான்.
மிகவும் அழகான பெண். அவளை பார்த்த உடனே ரிஷிக்கு பிடித்துவிட்டது. அப்படி ஒரு கிராமத்து அழகு பாவாடை தாவணியில் சிறிது அலங்காரத்தோடும் கண்களில் மிரட்சியோடும் அவள் தயங்கி தயங்கி நின்ற விதம் ரிஷிக்கு பிடித்திருந்தது. அவன் தன் வாழ்க்கையில் எத்தனை பெண்களை பார்த்திருந்தாலும் இந்த அழகுக்கு ஈடு இணையில்லாமல் இருக்கவே அவளை இன்னும் உன்னிப்பாக பார்த்து ரசித்தான் ரிஷி.
சிற்பி வடித்த சிலை போல் இருந்தாள் அளவான உயரம் தங்கமீனின் நிறம் மீன் போன்ற வழவழப்பான தேகம் மாசு மறுவில்லாத தெளிவான முகம் மீன் போன்ற கண்கள் என அவளை இன்ச் இன்ச்சாக அளவெடுத்தவன் எதேச்சையாக திரும்பியவன் தன்னை உக்கிரமாக பார்த்த அர்ஜூனைப் பார்த்து
”என்ன” என கேட்டான் ரிஷி. அவனை தனியாக அழைத்துக்கொண்டு சென்ற அர்ஜூன்
”என்ன அண்ணா இங்க நடக்குது எந்த பொண்ணையும் பார்க்காத நீங்க இந்த பொண்ணை இப்படி பார்க்கறீங்க, நீங்க பார்க்கற பார்வையில் அந்த பொண்ணு கரையில போட்ட மீனை போல நெளியுது பாருங்க” என கூறவும்