”அண்ணா என்ன அண்ணா அந்த பொண்ணு உங்களை அத்தான்னு கூப்பிடுது எப்படி” என சந்தேகமாக கேட்டான் அதற்கு ரிஷி சிறிதும் அதிர்ச்சியடையாமல் அவனிடம்
”டேய் எனக்கு எப்படிடா தெரியும்”
”உங்களுக்கு அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு யாராவது இருக்காங்களா”
”இருக்கலாம்”
”அப்படின்னா அதுல ஒண்ணாதான் இருக்குமோ” என கேள்வியோட கேட்ட அர்ஜூனிடம்
”ம் சரி வா கேட்கலாம்” என்றான் ரிஷி
”அண்ணா எல்லாத்தையும் தெருவுல தான் கேட்பீங்களா வாங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்”
”சரி வா” என அவளிடம் இருவரும் வந்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சென்று ஏதேதோ பேசுவதை கண்டவள் மனதில் திக்திக்கென்றது. அவர்கள் வருவதை கண்டவள்
”வா நந்தினி.... உள்ளே வா” என ரிஷி விட்டு விட்டு கூற
அர்ஜூன் தலையில் அடித்துக்கொண்டு
”அம்மா தாயே உள்ளே வா ரோட்ல எதுக்கு பேசிக்கிட்டு, இவ்ளோதான் உன் லக்கேஜா கிளம்பு உள்ளே போ” என அவளுடைய லக்கேஜை தூக்கிக்கொண்டு உள்ளே வேகமாக சென்றான் அர்ஜூன். ரிஷியும் தன்னுடைய ஜீப்பில் ஏறி அதை ஸ்டார்ட் செய்யவும் வாட்ச்மேன் கேட் திறக்கவும் ரிஷி தன் வண்டியை ஷெட்டில் பார்க் செய்ய சென்றான்.
தனியாக விடப்பட்ட நந்தினி மெதுவாக உள்ளே வந்தாள். அந்த வீடு சே சே மாளிகை மிகவும்