(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

கடுப்பானான் ஆனாலும் வேறு வழியில்லாமல்

  

”ஓ சரி சரி தாராளமா வாங்கிக் கொடு அப்படியே நானும் உனக்காக”

  

”ப்ளீஸ் ப்ளீஸ் தருண் என்கிட்ட ஏற்கனவே துணிகள் நிறைய இருக்கு, இளங்கோ வாங்கித்தந்தது, நான் இன்னும் போடாததுன்னு நிறைய இருக்கு, அதுவே போதும் இப்ப ஷாப்பிங் வந்ததே உனக்காகத்தான் தருண்” என அன்பாக பேச தருணோ

  

”எனக்காகதான் வந்தேன்ங்கற அப்புறம் ஏன் என் விருப்பப்படி துணி எடுக்க மாட்டேங்கற சரி சரி உன்னை விட்டுபிடிக்கிறேன்” என மனதுக்குள் நினைத்தவன் அவளுடன் துணிகளை பார்வையிடலானான்.

  

இளங்கோவிற்கு பிடித்த உடைகள் என அவள் எடுக்கும் எந்த உடையும் ஏனோ தருணுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு என எடுத்திருந்தால் பிடித்திருக்கும் போல, விலையான தரமான உடைகளையே எடுத்து அவனிடம் தர அவனும் முகம் மலர்ந்து அதை வாங்கிக் கொண்டான்

  

அடுத்து நகை கடைக்கு கூட்டிச் சென்றான் தருண்

  

”இங்க எதுக்கு”

  

”தாலி வாங்க வேணாமா”

  

”ஊப்ஸ் நான் சொல்லவே மறந்துட்டேன், என் அம்மா நினைவா என்கிட்டயிருந்தது அவங்களோட தாலிதான், அதை இளங்கோவோட கல்யாணத்தப்ப நான் பயன்படுத்த நினைச்சேன் ஆனா அந்தச் சமயம் இளங்கோவும் ஒரு தாலி வாங்கியிருந்தாப்ல. என் விருப்பத்தை மதிச்சி என் அம்மா தாலியை அவர் எனக்கு கல்யாணத்தன்னிக்கு அணிவிச்சாரு, அவர் வாங்கி வைச்ச தாலி இன்னும் பத்திரமா லாக்கர்ல இருக்கு, அதை வேணா இப்ப நடக்கற கல்யாணத்துக்கு பயன்படுத்திக்கலாமா ப்ளீஸ் இப்படி செய்தா இளங்கோவோட ஆத்மா சந்தோஷப்படும்”

  

”என்னது ஆத்மாவா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.