(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

செய்த கலாட்டாவுல பால் எங்க ரெண்டு பேர் மேலயும் கொட்டிடுச்சி, அதை அவனே துடைச்சி விட்டான், பழத்தால என் முகம் முழுக்க பூசி விட்டுட்டான் அதையும் அவனே துடைச்சி விட்டான், அன்னிக்கு அவன் சின்ன புள்ளை போல நடந்துக்கிட்டது எனக்கு இப்ப கூட நினைவுக்கு வருது என்னால அந்த நாளை மறக்க முடியலை தருண்” என சொல்ல தருணுக்கு ஆச்சர்யமும் கோபமும் அதிகமானது.

  

இவளை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என நினைத்தவன் அவளை நெருங்கினான் மெதுவாக

  

”என்ன செய்றீங்க தருண் ப்ளீஸ் இன்னும் என் மனசு மாறலை எனக்கு டைம் வேணும் ப்ளீஸ்” என சொல்ல உடனே அவன் தள்ளி நின்றான்

  

”சாரி சாரி அது கல்யாணம் ஆயிடுச்சிங்கற உரிமையில அப்படி நெருங்கிட்டேன்”

  

”கல்யாணம் ஆனாலும் என் மனசு மாறனும் தருண், அதுவரைக்கும் நாம கொஞ்சம் தள்ளியே இருக்கலாமே”

  

”தள்ளின்னா அப்போ ஹனிமூன்”

  

”என்னது ஹனிமூனா” என அலறினாள். அதில் தருண் புரிந்துக் கொண்டான் மறுபடியும் இவள் இளங்கோவின் பாடலை பாடுவாள் என நினைத்து முடிப்பதற்குள் ஹரிணி இளங்கோவை பற்றிதான் புலம்பினாள்.

  

”ஹனிமூன்னு சொன்னதும் எனக்கு இளங்கோவோட நினைப்புதான் வருது, தருண் நாங்க ஹனிமூன்ல எவ்ளோ சந்தோஷமா இருந்தோம் தெரியுமா” என அவள் கதை சொல்லத் தொடங்கியதும் தருணுக்கு உடனே பவானியின் நினைவு வந்தது

  

”பவானி எதுக்கு இப்போ ஹனிமூன் ட்ரிப் அரேன்ஜ் பண்ண”

  

”கம்பெனியில ஏற்பாடு செய்தாங்க தருண் அதுதான்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.