ஷாக்கானான் தருண்
”என்னது ஆபிசுக்கா ஆனா, கல்யாணத்துக்காக லீவு எடுத்தோமே எதுக்காக நீ ஆபிசுக்கு போன”
”கமான் தருண் நான் ஒரு ஹெச் ஆர், என் கல்யாணத்துக்காக நான் ஒருநாள்தான் லீவு எடுத்தேன்”
”ஆனா நான் ஒரு வாரம் லீவு எடுத்தேனே”
”எதுக்காக அத்தனை நாள் லீவு“
”ஹனிமூனுக்காக”
”அதான் வேணாம்னு ஆயிடுச்சே, இனியும் எதுக்கு லீவு உனக்கு சீக்கிரமா ரெடியாகி கம்பெனிக்கு வா”
”இதுக்கு மேல நான் ரெடியாகி வரனுமா”
”ஏன் என்னாச்சி உடம்பு சரியில்லையா”
”ஆமாம் ராத்திரி தூங்க நேரமாயிடுச்சி விடிகாலையிலதான் தூங்கினேன் அதான்”
”ஓ புது இடம்ங்கறதால சரியா தூங்கலையா, சரி சரி நீ வேணா இன்னிக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு ஆபிசுக்கு வந்துடு, ஓகே பை தருண் ஆபிஸ் வந்துடுச்சி நான் ஈவ்னிங் வந்து உன்னை பார்க்கிறேன் பை பை” என சொல்லிவிட்டு ஹரிணி போனை வைத்துவிட கடுப்பானான் தருண்.
கோபத்தில் எதை உடைப்பது எதை அடிப்பது என தெரியாமல் சுற்றி முற்றி பார்த்து ஓய்ந்துப் போய் சோபாவில் அமர அவனுக்கு கண் எதிரே இளங்கோவின் படம் இருந்தது
அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாகி நேராக இளங்கோவின் போட்டோவை தன் கையால்