(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”ஆமாம் தருண் அடிக்கடி எனக்கு தோணும், இளங்கோவோட ஆத்மா என்னை சுத்தியேதான் இருக்குன்னு, நான் சந்தோஷமா இருந்தா இளங்கோவோட ஆத்மாவும் சந்தோஷமாகும்லயா ப்ளீஸ் தருண் வேணாம்னு சொல்லாதீங்க ப்ளீஸ்” என அவள் கெஞ்ச தருணுக்கு வெறுப்பே வந்தது ஆனாலும் தனது வெறுப்பை அடக்கிக் கொண்டு சரியென தலையாட்டினான், உள்ளுக்குள் எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தான், அதோடு ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பினார்கள் இருவரும் ஹரிணி தனது அறைக்குச் செல்ல தருணும் தனக்கென ஒதுக்குப்பட்ட அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டு கையில் இருந்த துணிகடை பையை தூர வீசி எறிந்தான், அந்தளவு கோபம் அவனுக்கு

  

”சே என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா, இளங்கோவா என்னை நினைன்னு ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு அதையே கெட்டியா பிடிச்சிக்கிட்டு என் உசுரை எடுக்கறா, அவனுக்கு பிடிச்ச துணிதான் நான் போடனுமா, அவன் வாங்கின தாலியைதான் நான் அவளுக்கு கட்டனுமா, இது எனக்கான வாழ்க்கையா இல்லை எனக்கு கிடைச்ச பிச்சை வாழ்க்கையா, ஆகட்டும் கல்யாணம் முடியட்டும், அதுக்கு அப்புறம் இருக்கு அவளுக்கு மெல்ல மெல்ல அவள் மனசை மாத்திடறேன், கல்யாணம் ஆனதும் ஹனிமூன் போகனும், நடக்க வேண்டியது உடனே நடந்திட்டா, தன்னால அவள் என் பக்கம் வந்துடுவா, இப்பவே டிக்கெட் புக் பண்றேன், எந்த ஊருக்கு போகலாம் சே ஊரா நோ நோ எந்த நாட்டுக்கு போகலாம், சுவிஸ்க்கு போகலாமா இல்லை பாரிஸ், அமெரிக்கா, சிங்கப்பூர் அடடா ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு, இதுல எதை செலக்ட் பண்றது தெரியலையே” என புலம்பிக் கொண்டிருந்தவனின் புலம்பலை கேமரா வழியாக பார்த்து திடுக்கிட்ட ஹரிணியோ மெல்ல தன்னை இயல்புக்கு கொண்டு வந்தாள்

  

”ஏன்டா நீ கெட்ட கேட்டுக்கு ஹனிமூன் கேட்குதா, நீ என் நிழலை தொடவிட்டாதானே, என் டெபிட் கார்டை வைச்சி என்னென்ன திட்டம் போடற இரு முதல்ல அதுக்கு ஒரு செக் வைக்கிறேன்” என தனக்குள் புது திட்டம் தீட்டிக் கொண்டாள்

  

மறுநாள் கல்யாண வேலையில் மும்முரமாக இறங்கினான் தருண். அதற்காக அவளின் டெபிட் கார்டை நன்றாகவே பயன்படுத்தி காசை கரைத்தான். அவளுக்கு அதுகூட பெரிதாக தெரிவதில்லை, அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் செய்யும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.