”தெரியலை ஒருவேளை தீயில எரிஞ்சவங்கள்ல உங்க பெற்றோர்கள் இருக்கலாம், ஏன்னா அப்படி தீயில இறந்தவங்க குடும்பத்தை காப்பாத்த முடியாம போனதால, அவங்க பிள்ளைகளை உங்களை போலவே ஆசிரமத்தில விட்டுட்டாங்க அப்படி வந்தவங்கதான் நீங்க”
”கார்மெண்ட்ஸ் எப்படி தீபிடிச்சி எரிஞ்சது”
”அதுலதான் மர்மம் இருக்குன்னு அந்த ஊருக்குள்ள வதந்தி, யாரோ செய்த சதிதான் காரணம்னு சொன்னாங்க ஆனா அது யார் என்னன்னு தெரியலை”
”அந்த கார்மெண்ட்சை இப்ப யார் பார்த்துக்கறது“
”யாருமில்லை 100 பேரை காவு வாங்கின இடம்னு அங்க மக்கள் நடமாட்டமே இருக்காது”
”நாங்க போய் அதை பார்க்கிறோம்”
”தாராளமா அப்புறம் ஒரு விசயம்“
”சொல்லுங்க“
”உங்களோட விசாரனை இப்ப எந்தளவுக்கு இருக்கு“
“ஒண்ணுமில்லை பூஜ்யம்” என்றான் அகத்தியன் அதைக்கேட்டு கமிஷனர் நொந்துக் கொள்ள நாச்சியாவோ
”சார் கவலப்படாதீங்க சார் எப்படியாவது இந்த கேஸை நாங்க முடிக்கிறோம்” என சொல்ல அவரும் சரியென தலையாட்டினார்.
இவ்விருவரும் வெளியேறி பைக்கில் மறுபடியும் அம்பேத்கர் நகர் நோக்கி விரைந்தார்கள். அங்கிருந்த தீயில்கருகி பாழடைந்து கிடந்த கார்மெண்ட்ஸ் முன் வண்டியை நிப்பாட்டி இருவரும் இறங்கி நின்று பார்த்தார்கள்.