”அந்த நினைப்பே உனக்கு வராது ஹரிணி இளங்கோவை விட நான் பெஸ்ட்டுன்னு நீ ஒரு நாள் புரிஞ்சிக்குவ“
“அந்த நாள் வரும் போது நான் உயிரோட இருக்க மாட்டேன் தருண்” என சொல்ல அவன் அதிர்ந்தான்
”ஏன் இப்படி சொல்ற”
”உண்மைதானே இளங்கோ என்னோட உயிர், அவனை விட பெஸ்டா யாராலயும் வரமுடியாது, அப்படி வந்துட்டா என்னால தாங்கிக்க முடியாது இளங்கோவை விட நீங்க பெஸ்ட்டுன்னு காட்டிக்க வேணாம், நீங்க எப்படியிருந்தீங்களோ அப்படியே இருங்க அது போதும்” என சொல்லிவிட தருணின் முகம் கருத்தேவிட்டது.
அமைதியாக தன் இடத்தில் படுத்து உறங்காமல் புரண்டபடியிருக்க அதைக் கண்ட ஹரிணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் காலையில் இருவரும் விரைவாக எழுந்து ரெடியானார்கள். ஹரிணியிடம் கார் இருந்தது தருணிடம் பைக் இருந்தது அவனோ அவளிடம் வந்தான்
”நானும் உன்கூடவே வரலாமா”
”இன்னும் நமக்கு கல்யாணம் ஆன விசயம் ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது தருண், ரிசப்ஷன் முடிஞ்ச பின்னாடி நாம ஒண்ணா போகலாம் ஓகேவா” என சொல்ல அவனோ சரியென நொந்தபடி தலையாட்டிவிட்டு தன் பைக்கில் ஏறிச் செல்ல அவளும் தன் காரில் ஏறிச் சென்றாள்
இருவரும் ஆபிசை அடைந்ததும் அவரவர்கள் இடத்திற்கு சென்றார்கள். காபி பிரேக் வரவும் ஆசையாக அவளிடம் வந்தான் தருண்