“ஹலோ சொல்லும்மா தங்கச்சி சொல்லு” என வேண்டுமென்றே பேச ரிஷியின் முகத்தில் கலர்கலர் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தது. உடனே அவன் ஆர்வமாக அர்ஜூன் அருகில் வர அர்ஜூன் உடனே
”ஆ சரி சரி வாங்கிட்டு வந்துடறேன்மா உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்”
”....”
”சரி சரி கண்டிப்பா நைட்தானே வந்துடறேன் டான்னு 7 மணிக்கு அங்க இருப்பேன் போனா வாங்கிட்டேன் கையிலதான் இருக்கு இப்ப பேங்குக்குதான் போறேன்”
“ஆ என்னம்மா எதுக்குன்னு கேட்கறியா உன் கைசெலவுக்கு பணம் வேணாமா ஹாஸ்டல்ல வைச்சா மிஸ் ஆயிடும், அதான் உனக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி ஏடிஎம் கார்டு தரலாம்னு”
ரிஷிக்கு பேச வேண்டும் போல தோண அவன் அர்ஜூனிடம் இருந்து போனை வாங்க முயற்சி செய்தான்
”டேய் கொடு நான் பேசறேன்” என கத்த உடனே பயந்த அர்ஜூன் சட்டென போனில்
”ஆ தங்கச்சி சொல்லும்மா அட என்னம்மா சரி சரி நான் போன் வைச்சிடறேன்” என சொல்லி அவசரமாக போனை வைத்தான் அர்ஜூன். அதைப்பார்த்து கத்தினான் ரிஷி
”இப்ப எதுக்கு நீ போனை கட் பண்ண”
“பேசிட்டேன் கட் பண்ணிட்டேன்”
“நான் பேசலையே”
“நீங்க ஏன் பேசனும்”