“அப்படியில்லை உன்னை பிடிச்சதால வரசொல்றேன்”
”நான் வரலைன்னா என்ன செய்வீங்க”
“தாத்தா எந்த பொண்ணை சொல்றாரோ அவளை கல்யாணம் பண்ணிக்குவேன்”
“அப்ப சரி நான் கிளம்பறேன்” என எழுந்தவளை பார்த்து குழம்பிப்போய் அவளது முன் சென்று நின்றான்
”என்ன கிளம்பற அப்ப நீ வரமாட்டியா”
“நீங்கதான் சொல்லிட்டீங்களே, நான் வந்தாலும் வரலைன்னாலும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, அப்புறம் என்ன நான் கிளம்பறேன்” என அவள் சென்றுவிட தான் என்ன சொன்னோம் என யோசித்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அவசரமாக வெளியே வருவதற்குள் அர்ஜூனை எழுப்பி விட்டிருந்தாள் நந்தினி.
அதைப்பார்த்து நொந்து போனவன் மெதுவாக அங்கு வந்தான்.
அதற்குள் நந்தினியின் கண்கள் கலங்கியிருக்க அர்ஜூன் அவளிடம்
”அண்ணா உன்னை அடிச்சிட்டாரா”
“இல்லை”
“அப்புறம் ஏன் அழற”
“நீங்க சொன்னது சரிதான் அண்ணா” என சொல்ல அர்ஜூன் அமைதியாக அவளை
”நீ போய் கார்ல உட்காரும்மா நான் வந்துடறேன்” என சொல்ல அவளும் அமைதியாக நடந்து சென்றுவிட்டாள். அவள் சென்றதும் அர்ஜூன் ரிஷியிடம் வந்தான்