“அது அந்த பொண்ணுங்களை பிடிக்கலை அதனால இவளை வரசொன்னேன்”
“அந்த பொண்ணுங்களை நீங்க பார்க்கவேயில்லை அதுக்குள்ள எப்படி முடிவு எடுப்பீங்க ஒருவேளை அவங்களை பார்த்து பிடிச்சிருக்கு தோணிச்சின்னா”
“தோணாது”
“ஏன் தோணாது”
“தெரியலை எனக்கு அவங்களை பத்தி சொன்னதுமே பிடிக்காம போயிடுச்சி”
“ஆக அந்த பொண்ணுங்களை பிடிக்கலை அவங்களை பிடிக்காததாலதான் நீங்க நந்தினியை வரசொல்றீங்க, ஒருவேளை நந்தினி வராம போனா தாத்தா சொல்ற பொண்ணைத்தானே நீங்க கல்யாணம் பண்ணிக்குவீங்க”
“ஆமாம்”
“அப்புறம் எதுக்கு நந்தினி வரனும் விடுங்கண்ணா அவள் வந்தாலும் வரலைன்னாலும் உங்களுக்கு என்ன கவலை தாத்தா முடிவுதான் உங்களுக்கு முக்கியம் அப்புறம் என்ன”
“அர்ஜூன் நீ என்னை குழப்பற”
“நான் தெளிவாதான் இருக்கேன் நீங்கதான் குழம்பிபோய் இருக்கீங்க”
“எனக்கு நந்தினி வேணும் அவள் என் வீட்டுக்கு வரனும்”
“எதுக்கு”
“போட்டியில கலந்துக்க”