(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

🌼🌸❀✿🌷

   

ஹேமா ஒருவழியாக அந்த பொருட்காட்சியை பார்த்து முடித்து, வேண்டிய பொருட்களுக்கு பணம் கட்டி வாங்கவும், நால்வரும் ஒன்றாக வெளியே வந்தார்கள்.

   

அதற்காகவே காத்திருந்ததுப் போல,

   

“சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன்...” என்றாள் ப்ரியா.

   

“நோ, நோ, நோ ப்ரியா! எவ்வளவு ஹெல்ப் செய்திருக்கீங்க? இன்னைக்கு டின்னர் எங்களோட சாப்பிட்டுட்டு தான் போகனும்!” 

   

ஹேமா என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்கு முன்பே ஜீவா அதை சொல்லி இருந்தான்!

   

ஹேமா ஆச்சர்யத்துடன் மகனைப் பார்க்க, ப்ரியா விக்கிராந்தை கேள்வியாகப் பார்த்தாள். ப்ரியாவிற்கு டின்னர் வரை தங்க விருப்பம் இல்லை என்பது விக்கிராந்திற்கு அவளின் பார்வை மூலமே புரிந்தது! விக்கிராந்திற்கும் ஜீவாவின் கண் பார்வையில் ப்ரியா இருப்பது பிடிக்கவில்லை!!!

   

“ப்ரியாக்கு வேலை ஏதாவது இருக்கும் ஜீவா...”

   

விக்கிராந்த் ப்ரியாவிற்காக பேச முயற்சி செய்ய, ஹேமா,

   

“வேலை இருந்தா என்ன, எப்படியும் ப்ரியா சாப்பிட்டு தானே ஆகனும்! எங்களோட சாபிட்டுட்டு போய் வேலை செய்யலாம். நாங்க தங்கி இருக்க ஹோட்டல் இங்கே இருந்து பக்கத்தில தான் இருக்கு. அங்கேயே ரெஸ்டாரன்ட்டும் இருந்தது! அங்கேயே போவோம். இவனோட அப்பாக்கு நான் ஃபோன் செய்து சொல்றேன்,” என சொல்லி, ஹேமா அனைவருக்குமாக சேர்த்து முடிவை எடுத்து, அடுத்து செய்வதை திட்டமிடவும் தொடங்கினாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.