(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

ப்ரியாவிற்கு அதில் விருப்பமில்லை என்பதை இப்போது அவளின் முகம் தெள்ள தெளிவாக காட்டியது!

   

ப்ரியாவின் மனதை ஏற்கனவே ஊகித்திருந்த விக்கிராந்த், ஹேமாவிடம்,

   

“இல்ல ஆன்ட்டி, எனக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு... யூ கேரி ஆன்... நாங்க கிளம்புறோம்... நெக்ஸ்ட் டைம் டின்னர் ப்ளான் செய்வோம்,” என்றான்.

   

“என்னப்பா விக்கிராந்த் இது?” ஹேமாவின் பேச்சில் ஏமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது!

   

“இல்லை ஆன்ட்டி, ரொம்ப முக்கியமான வேலை...” என்று விக்கிராந்த் இழுக்க,

   

“ஓகே, அப்போ நான் ஒரு ப்ளான் சொல்றேன் விக்கிராந்த்! நீங்க கிளம்புங்க, ப்ரியா எங்க கூட டின்னர் வரட்டும், நாங்களே அவங்களை ட்ராப் செய்திடுறோம்,” என்றான் ஜீவா.

   

“இல்ல, அதெல்லாம் வேண்டாம், நானும் அவர் கூடவே கிளம்புறேன்!”

   

ப்ரியா அதை சொன்ன விதம், ஜீவா, விக்கிராந்த் இருவரையும் அவள் பக்கம் பார்க்க வைத்தது.

   

“எனக்கும் இன்னைக்கு நைட்டே முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலை இருக்கு. வீட்டுல இருந்தா சாப்பிட்டுட்டே வேலை செய்யலாம், அது தான்,” என்றாள் ப்ரியா அவசரமாக!

   

“ஓகே, புரியுது! உங்களை நான் கம்பல் செய்ய விரும்பலை ப்ரியா. டின்னர் வேண்டாம், பக்கத்துல இருக்க அந்த ஜூஸ் கடையில் ஜூஸாவது குடிக்கலாம் வாங்க!”

   

ஜீவாவின் விருப்பப் படியே அருகில் இருந்த கடையில் ஜூஸ் அருந்தி விட்டு, ப்ரியாவும், விக்கிராந்தும் கிளம்ப தயாரானார்கள். ப்ரியா ஹேமாவிடம் விடை பெற்றுக் கொண்டிருக்க, ஜீவா விக்கிராந்தின் அருகில் வந்து அவனின் தோளில் நட்புடன் கையை போட்டுக் கொண்டான்...

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.