“அப்போ கிளம்பலாம். வா வினாயக் காருக்கு போவோம்.” ப்ரியம்வதா வினாயக்கின் பக்கத்தில் சென்றாள்.
“இவரும் வராரா? காருல அஞ்சு பேர் போக முடியும். நீ, நான், ஸ்ரீனி, ராகுல், அத்தை. அதுவே அஞ்சு பேராச்சு??”
ஐஸ்வர்யாவை எரித்து விடுபவள் போல பார்த்து முறைத்த ப்ரியம்வதா, சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டாள்!
“பரவாயில்லை. நானும் வினாயக்கும் வேற காருல வரோம். நீங்க நாலு பேரும் ஃப்ரீயா போங்க!”
“அப்போ வினாயக் எங்க கூட வரட்டும். ஸ்ரீனி உன்னோட வரட்டும். நாளைக்கு கல்யாணம் செய்துக்க போறவங்க. தனியா போனா பேச வசதியா இருக்கும்.” ஐஸ்வர்யா இளிப்புடன் சொல்ல, ப்ரியம்வதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபமாக கத்த அவள் நினைத்த நொடி, வினாயக் புன்னகையால் மலர்ந்த முகத்துடன் அவளின் கைப் பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
எத்தனை வருடங்களாக அவனையே நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கிறாள்! இவனுக்கு கண் என்று ஒன்று இருக்கிறதா? சில நிமிடங்களுக்கு முன் தானே அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான்!
“என்ன பேசுற வினாயக்? நீ என்ன முட்டாளா?” கோபத்தை மறைக்காமல் வெளியே காட்டினாள் ப்ரியம்வதா.
“அவர் மேல எதுக்கு கோபப்படுற ப்ரியம்வதா? அவர் சரியா தானே பேசுறாரு?” ஐஸ்வர்யா