இல்லாமல் ஸ்ரீனிவாசுடன் கார் நோக்கி சென்றான்.
அவர்கள் சென்றதும், ப்ரியம்வதாவிடம், “என்ன இருந்தாலும் நீ அவங்களை அடிச்சது தப்பு ப்ரியம்வதா. பாரு, அவங்க உன்னைப் பத்தி உன் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லலை. போ, போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேள். அவங்களையும் வரச் சொல்லு,” என்றான் வினாயக்.
“யார் கிட்ட பேசனும், யார் கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நான் முடிவு செய்துக்குறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு!” ப்ரியம்வதா இப்போதும் கோபத்துடன் எரிந்து விழுந்தாள்!
“உனக்கு என்ன ஆச்சு? ஏன் இபப்டி எல்லாம் பேசுற, நடந்துக்குற???”
ப்ரியம்வதாவிற்கு வினாயக்கின் சட்டையை பிடித்து மனதிலிருக்கும் கேள்விகளை நேரடியாக கேட்க வேண்டும் போல ஆத்திரம் வந்தது. கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
காருக்கு வந்தப் பிறகும் வினாயக் வரவில்லை!
ப்ரியம்வதா பல தடவை அவனின் மொபைலில் அழைத்துப் பார்த்தாள். எந்த பதிலும் இல்லை. வேறு வழி இல்லாமல் அவன் இல்லாமலே அவர்கள் மட்டும் கிளம்பினார்கள்.
❀✿❀✿❀✿
நடந்ததை முழுவதுமாக சொல்லாமல், அவளுக்கும் ஐஸ்வர்யா, வினாயக்குக்கும் நடுவே நடந்த உரையாடலை சுருக்கமாக இன்ஸ்பெக்டரிடம் சொன்னாள் ப்ரியம்வதா.