மனைவியைப் பார்க்க, அதை கவனிக்காமல் சக்தி, “எல்லோர் கிட்டேயும் பேசிட்டீங்களா தேன்? என்ன நினைக்குறீங்க? எதுக்கு இந்த் சந்திர மௌலி இங்கே வந்தார்ன்னு தெரிஞ்சுதா?” என கேள்விகளை அடுக்கினாள்.
பார்வையை மனைவியிடம் இருந்து சக்தி பக்கம் திருப்பிய தேன் மறுப்பாக தலை அசைத்தான்!
“போலீஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருக்குற விஷயங்களை வெளியே சொல்லக் கூடாதுன்னு உங்களுக்கே தெரியும் சக்தி. என் கிட்ட இதை எல்லாம் கேட்கவே கேட்காதீங்க, ப்ளீஸ்!”
“சாரி, பழைய ஞாபகத்துல பேசிட்டேன் தேன். வினாயக்கை பார்த்தீங்களா?”
“இல்லை சக்தி. அவரை பார்த்திருந்தா இந்நேரம் அரெஸ்ட்டும் செய்திருப்பேனே!’
“வினாயக் தான் கொலை செய்ததா??? எவிடென்ஸ், சாட்சி ஏதாவது கிடைச்சிடுச்சா???”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ினாயக்குக்கும் ஏற்கனவே தகராறு இருக்கு. மத்தபடியும் நம்ம கிராமத்துல யாரு வந்து ரோபோ, ட்ரோன் எல்லாம் வச்சு விளையாடப் போறது? இந்த ஊரில “எல்லாம் தெரிஞ்ச சத்யா”க்கே ட்ரோன் பத்தி நான் தான் சொன்னேன். அப்புறம் மேல சொல்லனுமா?”
தென்றல்வாணன் அதிசயத்திலும் அதிசயமாக தன் போலீஸ் தோரணையை விட்டு விட்டு கணவனாக மனைவியை கிண்டல் செய்தான். சத்யா அவனைப் பார்த்து முறைத்தாள்.