ஐஸ்வர்யா வினாயக்கை நாய், பூனை என்றெல்லாம் பேசிய பேச்சிற்கு பிறகு கூட ப்ரியம்வதா அவளை அறைந்ததது தவறு என்று தானே வினாயக் பேசினான். அவனாவது வேறு ஒரு உயிரை துன்புருத்துவதாவது, வாய்ப்பே கிடையாது!
அவளுடைய வினாயக் நல்லவன்!
ப்ரியம்வதாவிற்கு வேறு எதில் குழப்பம் இருந்தாலும் அந்த ஒரு நம்பிக்கையில் மட்டும் சிறிதளவும் மாற்றம் ஏற்படவில்லை!
❀✿❀✿❀✿
தென்றல்வாணன் ப்ரியம்வதாவிடம் விசாரித்து விட்டு தன் போலீஸ் காருக்கு திரும்பியப் போது அங்கே சக்தியும் அபினவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் பக்கத்தில் சத்யாவும், அஹல்யாவும் நின்றிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி அருணும் ஷாலினியும் வேறு சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“அபினவ், நான் ஸ்டேஷன் போறேன். நீ வர வேண்டாம். அஹல்யாவோட இரு. இந்த நேரத்துல நீ அஹல்யா கூட இருக்குறது நல்லது,” என்று சொல்லிக் கொண்டே காரில் அமர்ந்தான் தேன்!
“தேங்க்ஸ் சார்,” என்றான் அபினவ் சல்யூட்டுடன்.
தலையை மட்டும் அசைத்த தேன், தன் மனைவியைப் பார்த்து, “சத்யா, நீயும் ஷாலினியும் தனியா போகாதீங்க. அபினவ் இல்லைனா சக்தி கூட போங்க,” என்றான்.
“ஓகே இன்ஸ்பெக்டர் சார்!” சத்யா தன் கடுப்பை மறைக்காமல் வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.
அவளின் வார்த்தைகளுக்கு பின் இருக்கும் ஏமாற்றம் உணர்ந்தவனாக தென்றல்வாணன்