“...வினாயக்கை ஐஸ்வர்யா பைத்தியம்னு எல்லாம் சொல்லவும் என்னால சும்மா இருக்க முடியலை சார். கோபத்துல அறைஞ்சிட்டேன். ஆனால் அதுக்காக வினாயக் என் கிட்ட கோவிச்சுக்கிட்டாரு. அதான் அவர் திருவிழாக்கு வரலை.”
“ஐஸ்வர்யா சொன்னதுல தப்பு இருக்குறதா எனக்கும் கூட தெரியலைங்க ப்ரியம்வதா. உங்க அம்மா, அண்ணா எல்லோரும் கூட அப்படி தான் சொல்றாங்க. நீங்க இப்போ இருக்க மனநிலைல உங்களால சரியா யோசிக்க முடியலைன்னு நினைக்கிறேன். எதுக்கும் அந்த வினாயக் கிட்ட கவனமாவே இருங்க,” என்றான் தென்றல்வாணன்.
ப்ரியம்வதாவிற்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இந்த இன்ஸ்பெக்டர் உட்பட அனைவருமே வினாயக் தான் சந்திரமௌலியின் இறப்பிற்கு காரணம் என்று முடிவே செய்து விட்டார்கள்!
வினாயக்கை தவிர வேறு ஒருவன் இந்த குற்றத்தை செய
...
This story is now available on Chillzee KiMo.
...
ை அவர் கான்டாக்ட் செய்தா உடனே என் கிட்ட பேச சொல்லுங்க.”
இன்ஸ்பெக்டர் சொன்னதற்கு பதிலாக ப்ரியம்வதா மீண்டும் தலையை மட்டும் ஆட்டி விட்டு எழுந்து நடந்தாள்.
அவளின் மனம் இப்போதும் வினாயக்கை சுற்றியே அலை பாய்ந்தது!
மற்றவர்கள் நினைப்பதுப் போல அவள் கண் மூடித்தனமாக வினாயக்கை நம்பவில்லை. அவளுக்கு அவனைத் தெரியும். நன்றாகத் தெரியும்!!!