சுருக்கமாக விபரங்கள் சொன்னான்.
“ஐ ஸீ!” தென்றல்வாணன் பேச்சில் சந்தேகம் அப்பட்டமாக இருந்தது.
அது புரிந்ததால், ப்ரியம்வதாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது
“இன்ஸ்பெக்டர் நீங்க தேவையே இல்லாம சந்தேகப் படுறீங்க. இந்த எஸ்டேட் ரொம்ப பெருசு. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் மேல இருக்கு. பல நாளா வேலை செய்றவங்க கூட நிறைய பேரா, ஒன்னா தான் போவாங்க. தனியா போய் மாட்டிக்கிட்டா வரது சுலபம் கிடையாது!”
பாப்காரன் போல பொரிந்து தள்ளியவளை எரிச்சலுடன் பார்த்தான் தென்றல்வாணன்.
“நான் கேட்குற கேள்விக்கு கேட்குறவங்க மட்டும் பதில் சொன்னா போதும். இப்போதைக்கு நான் வினாயக் கூட தான் பேசனும். நீங்க வீட்டுக்கு போகலாமே ப்ரியம்வதா!”
“நான் வினாயக்கை உங்க கிட்ட தன
...
This story is now available on Chillzee KiMo.
...
டுமே. அவனுக்கே அவன் மீது சந்தேகமாக இருக்க, அவள் மட்டும் தான் அவன் மேலே 200% நம்பிக்கையுடன் பேசினாள். அவளின் பேச்சு அவனுக்கும் நம்பிக்கையை கொடுத்தது! அதனாலேயே அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
தென்றல்வாணனுக்கோ ப்ரியம்வதாவின் பதில் எரிச்சலை அதிகமாக்கியது. இருந்தாலும், ப்ரியம்வதாவை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடிவு செய்து வினாயக்கிடம் பேசினான்.