“சந்திரமௌலி பத்தி உங்களுக்கு தெரியும் தான வினாயக்?”
“சப் இன்ஸ்பெக்டர் சொன்னார் இன்ஸ்பெக்டர்,” என்றான் வினாயக் சின்னக் குரலில்!
“சந்திரமௌலி எதுக்கு மதியூர் வந்தாருன்னு நினைக்குறீங்க?”
“அவர் கொலை செய்யப்பட்ட நியூஸ் கேட்ட உடனே, எனக்கு வந்த முதல் கேள்வியும் அது தான் இன்ஸ்பெக்டர். சந்திரமௌலிக்கு இங்கே ரிலேட்டிவ்ஸ் யாராவது இருக்காங்களோ என்னவோ!”
“அப்போ உங்களுக்கு அவர் ஏன் இங்கே வந்தாருன்னு தெரியாதுன்னு சொல்றீங்க?”
“எனக்கு எப்படி அவர் வரது தெரியும் இன்ஸ்பெக்டர்?”
“சந்திரமௌலிக்கும் உங்களுக்கும் நடுவே பெரிய சண்டை இருந்ததா கேள்விபட்டேன்!”
வினாயக்கின் முகம் கருத்தது.
“நான் அவரோட கம்பெனியில வேலை செய்தேன். எங்களுக்குள்ளே கருத்து மோதல் இருந்தது உண்மை தான்.”
“கருத்து மோதல் மட்டும் தானா என்ன? சென்னைல சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ்ல போலீஸ் விசாரிச்சப்போ, சந்திரமௌலிக்கு முதல் எதிரி நீங்களா தான் இருப்பீங்கன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. நீங்க ஒரு தடவை அவரை ‘சாகடிச்சிடுவேன்னு’ மிரட்டினதா வேற சொல்றாங்க!”
வினாயக் இதை எதிர்பார்த்திருந்தான். சந்திரமௌலி எதிராக நடந்த வழக்குகளின் தாக்கத்தில் ஒருமுறை அவன் கோபத்தில் கத்தியது அது.
“கோபத்துல சொன்னது இன்ஸ்பெக்டர் அது. லிட்றலா அதே அர்த்தத்துல சொல்லலை!”