அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.” ப்ரியம்வதா கண்களில் கட்டி நின்ற கண்ணீருடன் அழாத குறையாக பேசினாள்.
வழக்கத்திற்கு விரோதமாக சக்தி அமைதியாக இருந்தாள்.
சத்யா சக்தியே ப்ரியம்வதாவை சமாதானப் படுத்துவாள் என்ற நம்பிக்கையில் முதலில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். சில வினாடிகள் போன பிறகும் சக்தி வாயைத் திறக்காமல் இருக்கவும் சத்யா ப்ரியம்வதாவை தேற்ற முயன்றாள்.
“கவலைப் படாதீங்க ப்ரியம்வதா. உண்மை எப்போவும் வெளியே வந்தே தீரும். உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுப்பிடிச்சா வினாயக் மேல விழுந்திருக்க பழி போயிடும்.”
சத்யா சொன்னது ப்ரியம்வதாவை தேற்றியதாக தெரியவில்லை. அவளுடைய கண்கள் சக்தி பக்கம் கவலையுடன் பார்த்தது.
அவளின் பார்வையை கவனித்த சத்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
ி சொன்ன உடன் ப்ரியம்வதாவின் முகம் சிறிது தெளிவானது.
“எப்போ எந்த டைம்ல எது வேணும்னாலும் கூப்பிடுங்க மேடம். வினாயக் பாவம்,” என்றாள் ப்ரியம்வதா.
“கவலைப் படாம போங்க ப்ரியம்வதா. எல்லாம் நல்லா தான் நடக்கும்.” சத்யா ப்ரியம்வதாவிடம் கரிசனத்துடன் பேசி வழி அனுப்பி வைத்தாள்.
திரும்பி வந்தவள் சக்தியின் நேரே சென்று நின்றாள்.