“என்ன நினைச்சுட்டு இருக்க நீ மனசுல? பாவம் அந்தப் பொண்ணு உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு பேசுறா. கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க?” சத்யா கோபத்தை மறைக்காமல் சக்தியிடம் நேராகவே காட்டினாள்.
“பாஸ்! கோபத்தை குறைங்க பாஸ். ப்ளட் ப்ரெஷர் ஏறிடப் போகுது,” என்றாள் சக்தி ஈஸியாக.
“என் ப்ளட் ப்ரெஷர் ஏறுறது இருக்கட்டும். உனக்கு என்ன பிரச்சனை, அதை சொல்லு. நீயும் வினாயக் நல்லவன்னு தான சொன்ன?”
“இப்போவும் அதையே தான் சொல்றேன் சத்யா. என் அமைதிக்கு காரணம் வினாயக் மேல எனக்கிருக்க சந்தேகம் கிடையாது. நீ தான்.”
“நானா? ஏன், நான் தான் எனக்கு சம்மந்தமே இல்லாத அந்த சந்திரமௌலியை பறக்கும் ரோபோ வச்சு ஷூட் செய்தேனா? அப்படியா யோசிக்குற? சொல்லும் போது எனக்கே காமெடியா இருக்கு,” என்றாள் சத்யா பெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
டிடக்டிவ்ஸ் சத்யாவா எனக்கு பதில் சொல்லு. தென்றல்வாணன் ஹானஸ்ட் ஆன, ஷார்ப்பான போலீஸ். சரியா தப்பா?”
“இதுல என்ன சந்தேகம்? அவர் ஹானஸ்ட், சின்சியர், ஷார்ப், இன்டலிஜன்ட் போலீஸ்!” சத்யா அடுக்கிக் கொண்டே போனாள்!
“கரக்ட் சத்யா! நானும் இல்லைன்னு சொல்லலை. அப்படி பட்ட தென்றல்வாணன் அவசர அவசரமா எந்த பெரிய சாட்சியும் இல்லாம வினாயக்கை அரெஸ்ட் செய்திருக்கார்!”